சென்னையில் ஷேர் ஆட்டோவில் போறீங்களா... அப்போ உஷாரா இருங்க!

சென்னையில் ஷேர் ஆட்டோவில் போறீங்களா... அப்போ உஷாரா இருங்க!
Updated on
2 min read

சென்னையில் ஷேர் ஆட்டோக்களை வாடகைக்கு எடுத்து அதில் பயணிக்கும் பயணிகளின் செல்போன்களை திருடும் கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை மாநகரில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. இதில் பலருக்கும் தாங்கள் தொலைத்த பொருட்கள் கிடைப்பது கேள்விக்குறிதான். எனினும் காவல்துறையினர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு அவ்வபோது தொலைந்து போன செல்போன்கள், பேக்குகள், நகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை கொண்டித்தோப்பு சபாபதி தெருவை சேர்ந்த மகேந்திர குமார் என்பவர் கடந்த 28-ம் தேதி இரவு மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள கடைக்குச் செல்ல ஷேர் ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார். பின்னர் தான் இறங்கும் இடம் வந்ததும் ஆட்டோவில் இருந்து இறங்கிய அவர், தனது கைபை, செல்போன் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஏழு கிணறு போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஷேர் ஆட்டோவின் எண்ணை கண்டுபிடித்து அதில் பயணித்தவர் களிடம் விசாரனை நடத்தினர். அப்போது ஆட்டோவில் இருந்த ஒரு பெண் உட்பட மூவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

விசாரணையில், திருவொற்றியூர் கார்கில் நகரை சேர்ந்த சுகுணா, மற்றும் அவரது மகன்களான மணலி சாஸ்திரி நகரைச் சேர்ந்த ரமேஷ் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பெருமாள் ஆகியோர் தான் அவர்கள் என தெரியவந்தது. இவர்கள் மூவரும் ஷேர் ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்து அதிலேயே பயணித்து அதில் பயணிக்கும் பயணிகளின் செல்போன், பணத்தை கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு மூவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து, 34 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

அடேயப்பா, 11.5 கோடி ரூபாய், 120 கோடி ஆவணங்கள் பறிமுதல்... அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!

எல்லா இந்தியர்களும் மோசமானவர்கள் அல்ல... பலாத்காரத்திற்குள்ளான ஸ்பெயின் பெண் பேட்டி !

ராகுல் யாத்திரையில் ஆம் ஆத்மி... குஜராத் பொதுக்கூட்டத்தில் கேஜ்ரிவால் இணைந்து கலக்க முடிவு!

நக்சல் தம்பதி கைது... பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் அதிரடி நடவடிக்கை!

பாடகருக்குப் பதில் களமிறங்கும் நடிகை... பாஜக போடும் பக்கா பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in