கார் ஓட்டியபோதே மாரடைப்பு... ஆர்எஸ்எஸ் தலைவரின் சோக மரணம்

கார் ஓட்டியபோதே மாரடைப்பு... ஆர்எஸ்எஸ் தலைவரின் சோக மரணம்

காருக்கு டீசல் நிரப்பிவிட்டு செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டதால் ஆர்எஸ்எஸ் மாவட்டத் தலைவர் காரிலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்துள்ளது.

கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டம் முதோலா தாலுகாவில் உள்ள லோகபுரா நகரைச் சேர்ந்தவர் சித்து சிக்கதானி. இவர் பாகல்கோட் மாவட்டத்தின் ஆர்எஸ்எஸ் தலைவராக உள்ளார். இவர் நேற்று இரவு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது காருக்கு டீசல் நிரப்ப சென்றுள்ளார்.

டீசல் நிரப்பிவிட்டு வீடு திரும்பும் போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் காரை ஓரமாக நிறுத்திய அவர், தனது இருக்கையில் சாய்ந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வெகு நேரமாக இந்த கார் நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சென்று பார்த்தப் போது சிக்கதானி மூச்சுப்பேச்சு இன்றி கிடந்துள்ளார். உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிக்கதானி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அங்குள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்து வருகின்றனர். டீசல் போட்டுவிட்டு திரும்பு வழியில் மாரடைப்பு ஏற்பட்டு ஆர்எஸ்எஸ் தலைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கட்டுக்கட்டாக பணம்... அள்ள அள்ள ஆவணங்கள்... திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ரெய்டு!

சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!

பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!

அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in