மாணவர்களின் கல்விக் கட்டணம் ரூ.35 லட்சம் கையாடல்... கல்லூரி ஊழியர் கைது; திருவள்ளூரில் அதிர்ச்சி!

கைதான வெங்கடேசன்
கைதான வெங்கடேசன்

திருவள்ளூரில் கடல்சார் கல்லூரியில் மாணவர்கள் செலுத்திய 35 லட்ச ரூபாய் கட்டணத்தை கையாடல் செய்த கல்லூரி ஊழியர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான பெண் கணக்காளரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியப்பாளையம் பகுதியில் சதர்ன் அகாடமி மற்றும் மாரி டைம்ஸ் ஸ்டடீஸ் என்ற பெயரில் கப்பல் சார்ந்த படிப்புக்களுக்கான கடல்சார் கல்லூரி செயல்பட்டு வருகிறது.. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.‌ இதன் தலைமை அலுவலகம் மயிலாப்பூர் ஆர்.கே சாலை இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக அசோகன் பணியாற்றி வருகின்றார்.

மோசடி
மோசடி

இந்நிலையில் நிர்வாக அதிகாரி அசோகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்த பொழுது, அதில் 35 லட்ச ரூபாய் அளவுக்கு பணம் கையாடல் செய்யப்பட்டது தெரிய வந்தது. பின்னர் அசோகன் இது குறித்து விசாரணை நடத்தியதில் அலுவலகத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வந்த வெங்கடேசன் மற்றும் கணக்காளர் காமினி ஆகிய இருவரும் கூட்டாக சேர்ந்து கல்லூரி மாணவர்கள் செலுத்திய கல்வி கட்டணத்தில் சுமார் 35 லட்சம் ரூபாயை கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது..

இதனை அடுத்து கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி அசோகன் இது குறித்து சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மார்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வந்த திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் கணக்காளர் காமினி இருவரும் சேர்ந்து மாணவர்கள் செலுத்திய கட்டணத்தில் 35 லட்ச ரூபாயை தங்களது வங்கி கணக்கில் செலுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது..

கைது
கைது

இதனை அடுத்து வெங்கடேசனை கைது செய்த ராயப்பேட்டை போலீஸார் தலைமறைவாக உள்ள காமினியை தீவிரமாக தேடி வருகின்றனர். கல்வி கட்டணமாக செலுத்தப்பட்ட பணத்தை கல்லூரி ஊழியர்களே சுருட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   

சாதி வாரி கணக்கெடுப்பு... இலவச கல்வி... ஏழை குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

கலக்கும் கருப்பையா... கலங்கும் துரைவைகோ... மலைக்கோட்டையில் மகுடம் யாருக்கு?

பெங்களூருவைத் தொடர்ந்து கேரளாவிலும் குண்டு வெடிப்பு... 2 பேர் படுகாயம்!

48 மணி நேரம் தான் டைம்: சந்திரபாபு நாயுடுவுக்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்!

மத்திய அரசு அதிரடி அறிவிப்பு... இனி குழந்தையின் பிறப்பு பதிவேட்டில் இதுவும் கட்டாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in