கொலை செய்யப்பட்ட நேஹா. அடுத்தபடம்: குற்றம் சாட்டப்பட்ட ஃபயாஸிடம் நடைபெற்ற விசாரணை
கொலை செய்யப்பட்ட நேஹா. அடுத்தபடம்: குற்றம் சாட்டப்பட்ட ஃபயாஸிடம் நடைபெற்ற விசாரணை

கல்லூரி மாணவி கொலைக் குற்றவாளிக்கு டிஎன்ஏ சோதனை... நீதிமன்றத்தில் சிஐடி போலீஸார் கோரிக்கை!

ஹூப்ளி கல்லூரி மாணவி நேஹா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஃபயாஸின் டிஎன்ஏ பரிசோதனைக்கு சிஐடி அதிகாரிகள், நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம், ஹூப்ளி மாநகராட்சி உறுப்பினர் நிரஞ்சனா ஹிரேமாதாவின் மகள் நேஹா. இவர் கல்லூரியில் எம்சிஏ படித்து வந்தார். அவரை பாகல் ஃபயாஸ் என்ற மாணவன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், இந்த காதலை நேஹா ஏற்கவில்லை.

கொலை செய்யப்பட்ட நேஹா அவரது தந்தையுடன்.
கொலை செய்யப்பட்ட நேஹா அவரது தந்தையுடன்.

இதனால் கல்லூரி வளாகத்தில் வைத்து ஏப்.18-ம் தேதி நேஹாவை ஃபயாஸ் கத்திக் குத்திக்கொலை செய்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த கொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்கொலை தொடர்பாக ஃபயாஸை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஃபயாஸ்
கைது செய்யப்பட்ட ஃபயாஸ்

இந்த நிலையில், இக்கொலை விவகாரத்தை எதிர்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இக்கொலை தொடர்பாக சிஐடி போலீஸார் விசாரணை நடத்த கர்நாடகா முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.

இதையடுத்து நேஹாவின் வீட்டிற்குச் சென்று அவரது பெற்றோரிடம் சிஐடி காவல் துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர். இந்த நிலையில், நேஹா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஃபயாஸை 6 நாட்கள் காவலில் எடுத்து சிஐடி காவல் துறை விசாரணை நடத்தியது.

நேஹா வீட்டில் சிஐடி அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்
நேஹா வீட்டில் சிஐடி அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்

இதையடுத்து ஃபயாஸின் டிஎன்ஏ சோதனைக்கு சிஐடி அதிகாரிகள் அனுமதி கோரியுள்ளனர். இதுதொடர்பாக 1வது கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்துள்ளனர். குறறவாளியை மதியம் 1 மணிக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், சட்டம் ஒழுங்கின் பின்னணியில் நேரத்தை மாற்றுமாறு நீதிபதியிடம் சிஐடி அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். குற்றப்புலனாய்வுத்துறையின் வேண்டுகோளை ஏற்று, குற்றம் சாட்டப்பட்ட ஃபயாஸை பிற்பகல் 3 மணிக்கு மேல் நீதிமன்றம் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இதனால் இவ்வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஹாட்ரிக் வெற்றி... உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கப் பதக்கங்கள்!

700 ஹெக்டேர் நாசம்; நைனிடால் நகரை நெருங்கியது காட்டுத் தீ: இந்திய ராணுவம் விரைந்தது!

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி 8 வயது சிறுமி மரணம்... வீட்டில் தனியாக இருந்தபோது விபரீதம்

ஆமாம்... தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து இருக்கிறது... இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி!

தனியார் கம்பெனியின் ஆசிட் தொட்டியில் விழுந்து தொழிலாளி மரணம்... சென்னை அருகே சோகம்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in