ராஜஸ்தான் அருகே விழுந்து நொறுங்கிய விமானம்... இந்திய விமானப்படை அதிகாரிகள் விரைவு!

ராஜஸ்தான் அருகே விழுந்து நொறுங்கிய ஆளில்லா விமானம்...
ராஜஸ்தான் அருகே விழுந்து நொறுங்கிய ஆளில்லா விமானம்...

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானது.

ஆளில்லா விமானங்கள் மூலம் வான்வெளி கண்காணிப்பு மற்றும் ஊடுருவல் தடுப்பு ஆகிய பணிகளை இந்திய விமானப்படை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீர் அருகே இந்திய விமானப்படை விமான தளத்திலிருந்து ஆளில்லா விமானம் ஒன்று செலுத்தப்பட்டது.

ஆளில்லா விமானம் (கோப்பு படம்)
ஆளில்லா விமானம் (கோப்பு படம்)

இந்த விமானம் விமானப்படைத் தளத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்திற்கு உள்ளானது. நல்வாய்ப்பாக கிராமத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சில மீட்டர்கள் தூரத்தில் இந்த விமானம் விழுந்ததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியதை அறிந்து உடன் இந்திய விமானப்படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இந்திய விமானப்படை அதிகாரிகள் ஆய்வு
விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இந்திய விமானப்படை அதிகாரிகள் ஆய்வு

விபத்தில் எஞ்சி இருக்கும் விமான பாகங்களை சேகரித்து அவற்றை ஆய்வுக்காக விமானப்படை தளத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என இந்திய விமானப்படை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in