வாம்மா லாட்ஜுக்குப் போகலாம்... நடுரோட்டில் பெண்ணை அழைத்த அரசு வழக்கறிஞரால் பரபரப்பு!

ஓட்டம் பிடித்த அரசு வழக்கறிஞர் ஸ்ரீராம்.
ஓட்டம் பிடித்த அரசு வழக்கறிஞர் ஸ்ரீராம்.

பாலியல் வன்கொடுமை வழக்கின் உத்தரவு நகலைத் தருவதாகக் கூறி பெண்ணை லாட்ஜுக்கு அழைத்த அரசு வழக்கறிஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா தலைநகர் பெங்களூருவைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். அரசு வழக்கறிஞர். ஒரு பெண் தொடுத்த பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. எனவே, ஜாமீன் மனுவை ரத்துச் செய்யக்கோரி மனு செய்ய அரசு வழக்கறிஞர் ஸ்ரீராமிடம், உத்தரவு நகலை அந்த பெண் கேட்டுள்ளார்.

அதற்கு மெஜஸ்டிக் அருகே ஓட்டல் அருகே உத்தரவு நகலைத் தருவதாக ஸ்ரீராம் கூறியுள்ளார். இதை நம்பி அந்த பெண்ணும் நேற்று அங்கு போய் உள்ளார். அப்போது செல்போனில் பேசிய ஸ்ரீராம், பருத்திப்பேட்டையில் உள்ள லாட்ஜுக்குச் சென்று வழக்கைப் பற்றி பேசலாம் என செல்போனில் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமடைமும் அடைந்த அந்த பெண், தன் கணவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தைக் கூறியுள்ளார். அத்துடன் அரசு வழக்கறிஞர் ஸ்ரீராம், தன்னை லாட்ஜ்க்கு அழைப்பதையும் கூறி அழுதார். இதைக் கேட்ட அந்த பெண்ணின் கணவர், அவரது நண்பர்கள் லாட்ஜ்க்கு அழைத்த அரசு வழக்கறிஞரின் செல்போன் பதிவை அனுப்பச் சொல்லியுள்ளனர். அதன்படி அந்த பெண்ணும் வழக்கறிஞர் ஸ்ரீராமின் செல்போன் பேச்சு பதிவை அனுப்பி வைத்தார்.

இதையறியாமல், சாலையில் நின்று கொண்டிருந்த ஸ்ரீராம், அந்த பெண்ணை லாட்ஜுக்குப் போகலாம் என்று மீண்டும் அழைத்தார். அப்போது அங்கு வந்த பெண்ணின் கணவர் மற்றும் நண்பர்கள், எந்த லாட்ஜுக்கு வர வேண்டும் என்று ஸ்ரீராமிடம் கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீராம், அவர்களிடமிருந்து தப்பியோட ஆரம்பித்தார். உடனே அப்பகுதி மக்கள், அரசு வழக்கறிஞர் ஸ்ரீராமை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீராமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீராமை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!

'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!

இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in