அதிர்ச்சி... போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை... உறவினர்களிடம் போலீஸார் விசாரணை!

தற்கொலை செய்து கொண்ட ஜார்ஜ்.
தற்கொலை செய்து கொண்ட ஜார்ஜ்.

சென்னையில் குடும்ப பிரச்சினை காரணமாக போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டசம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமுல்லைவாயில் எஸ்.எம். காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜார்ஜ் (29). கடந்த 2016-ம் ஆண்டு தமிழக காவல் துறையில் பணிக்கு சேர்ந்த இவர் ஐந்தாவது பெட்டாலியனின் பணியாற்றி வந்தார். தற்போது டிஜிபி அலுவலகத்தில் அதிகாரி ஒருவருக்கு ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த 2018-ம் ஆண்டு உறவினர் பெண்ணான பிராணா (28) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் சன்வி என்ற பெண் குழந்தை உள்ளது. மதுவிற்கு அடிமையான ஜார்ஜ், தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று வழக்கம் போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஜார்ஜ் தனது மனைவிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது ‌. பின்னர் இரவு தூங்கச் சென்ற ஜார்ஜ் நள்ளிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை மனைவி பிராணா எழுந்து பார்த்த போது, கணவர் தூக்கில் பிணமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக திருமுல்லைவாயில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் அங்கு வந்த போலீஸார், ஜார்ஜ் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஜார்ஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜார்ஜ் உறவினர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. குடும்பத் தகராறில் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


அதிரடி... 10,000 நிறுவனங்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது; பயணிகள் அவதி!

உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

துர்கா பூஜை பந்தலில் பயங்கர நெரிசல்... 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்த சோகம்

ராவண வதத்தில் பங்கேற்கும் முதல் பெண்... பிரபல இந்தி நடிகைக்கு குவியும் பாராட்டு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in