மகளின் பாலியல் வீடியோவை தாயாருக்கு அனுப்பி பணம் பறிப்பு... இளைஞருக்கு ஸ்கெட்ச் போட்ட போலீஸார்!

ஜித்
ஜித்

கேரளாவில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக எடுத்து தாயாருக்கு அனுப்பி லட்சக்கணக்கில் மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள ஏரூர் பகுதியை சேர்ந்தவர் ஜித் (26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இதனால், அப்பெண்ணிடம் ஜித் நெருக்கம் காட்டி வந்துள்ளார். ஒரு நாள் வீட்டுக்கு அப்பெண்ணை அழைத்துள்ளார். அவரை நம்பி சென்ற இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த கூல் டிரிங்ஸை கொடுத்துள்ளார். இதை குடித்த சில நிமிடங்களில் அப்பெண் மயங்கமடைந்தார். பின்னர் அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலை நிகழ்த்திய ஜித், அதை ரகசியமாக வீடியோவும் எடுத்துள்ளார்.

காதல்
காதல்

பின்னர், அப்பெண்ணின் தாயாருக்கு பாலியல் வீடியோவை ஜித் அனுப்பியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தாயாரிடம், பலமுறை மிரட்டி ஜித் லட்சக்கணக்கில் பணம் கறந்துள்ளார். வீடியோ வெளியே போனால் பெண்ணின் வாழ்க்கை பாழாகிவிடும் என்ற அச்சத்தில், ஜித் கேட்கும்பொழுதெல்லாம் பணம் கொடுத்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த பாலியல் வீடியோவை, தனது நண்பர்களுக்கு அனுப்பியும், அதை கூட்டாக அமர்ந்து நண்பர்களுடனும் பார்த்து ரசித்துள்ளார். பணம் கேட்டு நாளுக்குநாள் தொந்தரவு அதிகமானதால், மனஉளைச்சல் அடைந்த தாயார், இதுகுறித்து கேரள காவல்துறையில் புகார் அளித்துள்ளார்

பாலியல் பலாத்கார வீடியோ
பாலியல் பலாத்கார வீடியோ

இதுகுறித்து கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ஜித்தை தேடத் தொடங்கினார். விசாரணையில், அவர் வெளிநாட்டுக்கு தப்பித்துச் செல்ல திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு போலீஸார், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். இந்த விவரம் தெரியாமல் வெளிநாடு செல்வதற்காக ஜித் நேற்று திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு சென்றார்.

அவரைக் கண்டதும் ஏரூர் போலீசுக்கு விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று ஜித்தை கைது செய்தனர். இதுபோன்று மேலும் பல பெண்களிடம் பாலியல் வன்கொடுமை செய்து, அந்த வீடியோ வைத்து பணம் பறிப்பில் ஜித் ஈடுபட்டாரா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!

இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!

ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!

லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in