உறவினருக்காக போராட்டம்; பெண் காவலரை இழுத்துச் சென்று கைது செய்த போலீஸார்!

போராட்டம் நடத்திய உறவினர்களை கைது செய்த போலீஸார்
போராட்டம் நடத்திய உறவினர்களை கைது செய்த போலீஸார்

இளைஞரின் மரணத்திற்கு நீதி கேட்டு உறவினர்களுடன் போராடிய பெண் போலீஸை, போலீஸார் தரதரவென இழுத்து சென்று கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி கிராமத்தை சேர்ந்த, அழகர், முத்துலெட்சுமியின் மூத்த மகன் அருண்ராஜ். இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் இடையே ஏற்கனவே கோயிலில் வழிபாடு தொடர்பாக பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த திங்கள் அன்று மாலை மணிகண்டன் அவரது உறவினர்களுடன் கிராமத்தில் உள்ள கோயில் வாசலில் பேசிக்கொண்டிருக்கும்போது, வேலை முடித்து வீடு திரும்பிய அருண்ராஜுக்கும் மணிகண்டனுக்குமிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கைது
பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கைது

இந்த மோதலின் போது, மணிகண்டனை அருண்ராஜ் தாக்கியதாக கூறி, மதகுபட்டி காவல் நிலையத்தில் மணிகண்டன் புகாரளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருண்ராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று 4ம் தேதி பிணையில் அருண்ராஜ் வீடு திரும்பிய நிலையில், மணிகண்டன் அருண்ராஜை அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அருண்ராஜ் அவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த மதகுபட்டி காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரது உறவினர்கள் இறப்பிற்கு காரணமான மணிகண்டனை கைது செய்யக்கோரி சிவகங்கை மானாமதுரை சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்து காவல்துறை அனுப்பிவைத்தனர். 2வது நாளான இன்று காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில் சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தை உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதுடன் வாயிலை மறித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கதவுகளை மூடிய போலீஸார்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கதவுகளை மூடிய போலீஸார்

அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி காட்வின் ஜெகதீஸ்குமார், சமாதானம் செய்த போதும், சமாதானம் ஆகாத உறவினர்கள் அருகேவுள்ள ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அவர்களை வழிமறித்த காவல்துறையினர், வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் இறந்தவரின் உறவினரான பெண் காவலர் (சென்னை) ஒருவர் வந்திருந்த நிலையில் அவரையும் கைது செய்ய ஏ.டி.எஸ்.பி காட்வின் ஜெகதீஸ்குமார் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பெண் காவலரை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். இருப்பினும் அவரது பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட போலீஸார் மறுத்துவிட்டனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!

'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?

கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!

நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!

நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in