திருமண நிகழ்ச்சிக்குச் சென்ற பெற்றோர்; தவறுதலாக காரில் வைத்து பூட்டப்பட்ட மகள்... மூச்சுத்திணறி பலியான சோகம்

கார் பார்க்கிங்
கார் பார்க்கிங்

ராஜஸ்தானில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு பெற்றோர் சென்றிருந்தபோது, 3 வயது மகளை தவறுதலாக காரிலேயே வைத்து பூட்டிவிட்டுச் சென்றனர். இதனால் சிறுமி உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவை சேர்ந்தவர் பிரதீப், இவர் நேற்று தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். நிகழ்ச்சி நடக்கும் இடத்தை அடைந்ததும், தாயும் மூத்த மகளும் காரில் இருந்து வெளியே வந்தனர்.

பின்னர் பிரதீப் தனது காரை நிறுத்துவதற்காக சென்றுள்ளார். அவர், மகள்கள் இருவரும் தாயுடன் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் சென்றதாக கருதி, காரை பூட்டிவிட்டு விழாவில் கலந்து கொள்ளச் சென்றார். அப்போது தாயுடன் மகள் இருப்பார் என தந்தையும், தந்தையுடன் மகள் இருப்பார் என தாயும் கருதிக்கொண்டு இருந்தனர்.

மரணம்
மரணம்

சுமார் இரண்டு மணி நேரம் கழித்து கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் சந்தித்தபோது, தங்கள் இளைய மகள் கோர்விகாவைப் பற்றி கேட்டுக்கொண்டனர். அவர் இருவருடனும் இல்லை என்பதை அறிந்ததும், அவர்கள் தங்கள் மகளை அனைத்து இடங்களிலும் தேடத் தொடங்கினர்.

மகள் கோர்விகாவைத் தேடிக் கொண்டே கார் இருக்கும் இடத்துக்கு வந்தபோது, காரின் பின் இருக்கையில் கோர்விகா 'மயக்கநிலையில்' இருப்பதைக் கண்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்து ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

இதுகுறித்து பேசிய கடோலி காவல் நிலைய எஸ்ஹெச்ஓ பன்னா லால், “ குழந்தையை பிரேத பரிசோதனை செய்ய பெற்றோர் மறுத்துவிட்டதால், வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என அவர்கள் முடிவு செய்துள்ளனர்” என்று அவர் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு... உருகும் ரசிகர்கள்

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

கடமை தவறிய இன்ஸ்பெக்டர், பெண் காவலர் சஸ்பெண்ட்... இளம்பெண் கொலை வழக்கில் பரபரப்பு!

கோவை பேருந்தில் சடலமாக மீட்கப்பட்ட ஐ.டி பெண் ஊழியர்... ஓட்டுநர், நடத்துநர் அதிர்ச்சி!

26 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அவசர உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in