வாக்குப்பதிவில் சோகம்... வாக்குச்சாவடி கழிவறையில் தவறி விழுந்து துணை ராணுவ வீரர் பலி!

தேர்தல் பாதுகாப்புப் பணியில் துணை ராணுவத்தினர் (கோப்பு படம்)
தேர்தல் பாதுகாப்புப் பணியில் துணை ராணுவத்தினர் (கோப்பு படம்)

மேற்கு வங்கத்தில் இன்று வாக்குச்சாவடியில் பணியில் இருந்தபோது, கழிவறைக்கு சென்ற துணை ராணுவ வீரர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

மேற்கு வங்க மாநிலம், கூச்பெஹார் மக்களவை தொகுதி மாதபங்காவில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்குப்பதிவு துவங்குவதற்கு சற்று முன்னதாக துணை ராணுவ வீரர் ஒருவர் கழிவறைக்கு சென்றார். அப்போது அவர் தவறி விழுந்ததில் மயக்கமடைந்தார். இதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல்

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த துணை ராணுவ வீரர் பெயர், விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை. தேர்தல் துவங்குவதற்கு சற்று முன்னதாக கழிவறையில் தவறி விழுந்து பாதுகாப்பு படைவீரர் உயிரிழந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கூச்பெஹாரில் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. பாஜக சார்பில் தற்போதைய எம்பி- நிசித் பிரமானிக் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் சார்பில் ஜெகதீஷ் பசுனியா போட்டியிடுகிறார்.

உயிரிழப்பு
உயிரிழப்பு

வடக்கு வங்காளத்தில் உள்ள கூச்பெஹாரில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின் போது மோதல் ஏற்பட்டது. இங்குள்ள சிதால்குச்சி வாக்குச்சாவடிக்கு வெளியே பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in