உணவு பணியாளருக்கு பாலியல் தொல்லை... தலைமறைவான பாஜக பிரமுகர் கைது!

பாஜக பிரமுகர் மகுடீஸ்வரன்
பாஜக பிரமுகர் மகுடீஸ்வரன்

பழனி அருகே காலை உணவுத் திட்ட பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தலைமறைவான பாஜக பிரமுகர் மகுடீஸ்வரனை கர்நாடகாவில் வைத்து தனிப்படை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத்தின் தலைவராக பதவி வகித்து வருபவர் செல்வராணி. இவரது கணவர் மகுடீஸ்வரன் பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். கடந்த 8ம் தேதி காலை சாமிநாதபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்ய வந்துள்ளதாக கூறி, பெண் சமையலர் ஒருவரை வழிமறித்து பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சாமிநாதபுரம்
சாமிநாதபுரம்

அங்கு சமையலறைக்குள் வைத்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது மகுடீஸ்வரன் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அலறியடித்து வெளியே ஓடிவந்த பெண் சமையலர், சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அறிந்ததும், மகுடீஸ்வரன் தலைமறைவானார்.

சாமிநாதபுரம் காவல் நிலையம்
சாமிநாதபுரம் காவல் நிலையம்

அவரை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கர்நாடகாவில் தலைமுறைவாக இருந்த மகுடீஸ்வரனை தனிப்படை போலீஸார் இன்று கைது செய்தனர். அவரை திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...   


சென்னை போலீஸாருக்கு குட்நியூஸ்... இன்று முதல் தபால் வாக்குகளைச் செலுத்தலாம்!

தமிழகத்தை 2 நாட்கள் வலம் வருகிறார் அமித் ஷா... நாளை முதல் ரோடு ஷோ, பிரச்சாரம்!

சத்துணவு திட்டத்தின் வித்தகர் பி.எஸ்.ராகவன் காலமானார்!

கேரள தேவாலயங்களில் 'மணிப்பூர் ஸ்டோரி' ஆவணப்படம் திரையிடல்... கடும் கொந்தளிப்பு!

அரசு செலவில் கட்சிக்கு ஆதரவான விளம்பரமா?... அச்சகங்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in