ஒடிசாவில் போலி காசோலை மூலம் அரசு நிதி ரூ.9.60 கோடி கபளீகரம்... மோசடி கும்பலைச் சேர்ந்தவர் கைது!

மோசடி நபர் கைது
மோசடி நபர் கைது

ஒடிசாவில் மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி ரூ.9.60 கோடியை மோசடி செய்த நபரை ஒடிசா காவல் துறையின் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர்.

ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்ட கனிம அறக்கட்டளை (டிஎம்எஃப்) நிதி ரூ.9.60 கோடியை மோசடி செய்ததாக போமேஷ் டெம்பாரே என்பவரை அம்மாநில காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 26ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், போமேஷ் டெம்பாரே, புவனேஸ்வர் அழைத்துவரப்பட்டார். பின்னர் பாலஸோரில் உள்ள நீதிமன்றத்தில் அவரை போலீஸார் இன்று ஆஜர்படுத்தினர். போமேஷ் டெம்பாரே, மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

இந்தியன் வங்கியின் தலைமை மேலாளர் பரிபாதா அளித்த புகாரின்பேரில் டெம்பாரே மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஒடிசா பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தரப்பில் கூறியதாவது: ‘போமேஷ் டெம்பாரே போலி காசோலைகளை தயாரித்து மோசடி செய்து ரூ.9.56 கோடியை அவருடைய மற்றும் அவரது கூட்டாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றினார்.

முறைகேடாக மாற்றப்பட்ட தொகையில் ரூ.5.04 கோடி முடக்கப்பட்டது. மேலும் 33 கணக்குகளில் இருந்த ரூ.13.56 லட்சமும் முடக்கப்பட்டுள்ளது. மேலும், போமேஷ் டெம்பாரே செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு, நக்ஸல்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கிராமத்தில் பதுங்கியிருந்தார். உள்ளூர் காவல்துறை மற்றும் சிஏபிஎஃப் வீரர்கள் உதவியுடன் ஒடிசா பொருளாதார குற்றப்பிரிவினர் அவரை கைது செய்தனர்.

பொருளாதார குற்றப்பிரிவு
பொருளாதார குற்றப்பிரிவு

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பெரிய நெட்வொர்க்கை கொண்டு பொமேஷ் டெம்பாரே இதுபோன்ற மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இவருடன் தொடர்புடைய மற்ற மோசடி நபர்களை கண்டறிய போலீஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்’ இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in