பீகாரில் அதிர்ச்சி... ஐக்கிய ஜனதா தளம் கட்சி பிரமுகர் சுட்டுக் கொலை!

நிதிஷ்குமாருடன் சவுரப்குமார் (வலது)
நிதிஷ்குமாருடன் சவுரப்குமார் (வலது)

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சியின் இளம் தலைவர் ஒருவர் பாட்னாவில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பீகார் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் இளம் தலைவராக அறியப்படுபவர் சவுரப் குமார். இவர் நேற்று இரவு தனது நண்பர்கள், குடும்பத்தினருடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு, திரும்பி வந்து கொண்டிருந்தார். பார்சா பஜார் கிராம பகுதியில் வந்த போது இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் திடீரென சவுரப் குமார் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் படுகாயமடைந்த சவுரப் குமாரை, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சவுரப் குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தலை மற்றும் நெற்றியில் குண்டு துளைத்ததே அவர் உடனடியாக உயிரிழக்க நேரிட்டது என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சவுரப் குமாருடன் வந்த மற்றொரு நபர், முன்மும் குமார் என்பவர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக புன்பூன் காவல் நிலைய பொறுப்பாளர் ஆர்.சிங் தெரிவித்தார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் சவுரப் குமார் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட மருத்துவமனை முன்பு திரண்டு, கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தினர்.

சவுரப் குமார்
சவுரப் குமார்

இந்நிலையில் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர். சவுரப் குமார் எதற்காக கொல்லப்பட்டார், இதற்கு பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பது குறித்து உடனடியாக தெரியவரவில்லை. மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பீகாரில் ஆளும் கட்சி பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in