கம்போடியாவிலும் கன்னம் வைத்த சுபாஷ் கபூர்... கொள்ளைபோன புராதன பொக்கிஷங்களை திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா

புராதன பொக்கிஷங்கள் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர்
புராதன பொக்கிஷங்கள் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர்

கம்போடியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் இருந்து சுபாஷ் கபூர் களவாடி, கடத்திய புராதன சிலைகள் உள்ளிட்ட பொக்கிஷங்களை அமெரிக்கா பத்திரமாக திரும்ப ஒப்படைத்துள்ளது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்களில் இருந்து கோயில் சிலைகளை கொள்ளையடித்ததில் தமிழர்களுக்கு மிகவும் பரிச்சயமான நபர் சுபாஷ் கபூர். கலைப்பொருள் சேகரிப்பு என்ற போர்வையில் பராமரிப்பு குறைவான தமிழகத்தின் கோயில்களை குறிவைத்து புராதன சிலைகளை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்திய பின்னணி சுபாஷ் கபூருக்கு உண்டு.

கம்போடியாவுக்கு திரும்பிய புராதன சிலைகள்
கம்போடியாவுக்கு திரும்பிய புராதன சிலைகள்

இதற்காக சர்வதேச வலைப்பின்னலில் பல தசாப்தங்களாக தனது கொள்ளை வணிகத்தில் கோலோச்சி வந்திருக்கிறார். இந்த சிலைகளை மீட்கும் முயற்சியில் 2011-ல் ஜெர்மனியில் கைது செய்யப்பட்ட கபூர், இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். தற்போது சிலைக்கடத்தல் வழக்கொன்றில் 13 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும் புராதன பொருட்கள் மீட்கப்படும் நாடுகளில் எல்லாம் சுபாஷ் கபூரின் பெயர் எதிரொலித்தபடியே உள்ளது.

தற்போது அமெரிக்க முகவர்கள் மற்றும் கடத்தல்காரர்களின் நெட்வொர்க்குகளால் கொள்ளையடிக்கப்பட்ட 30 புராதனப் பொருட்கள் அவற்றின் தாயகமான கம்போடியா மற்றும் இந்தோனேசியாவிற்கு நேற்று பத்திரமாக கையளிக்கப்பட்டது. இதனை நியூயார்க் அட்டர்னி ஆல்வின் பிராக் என்பவர், இன்று உறுதி செய்துள்ளார். இந்த சிலைகளின் கொள்ளை மற்றும் கைமாற்றப்பட்டதன் பின்னணியிலும் சுபாஷ் கபூர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியா - கம்போடியாவிற்கு திரும்பியிருக்கும் சிலைகளின் மதிப்பு மட்டும் 3 மில்லியன் அமெரிக்க டாலர் என ஆல்வின் பிராக் தெளிவுபடுத்தி உள்ளார். கம்போடியாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட இந்து கடவுளான சிவனின் வெண்கல சிலை மற்றும் இரண்டு அரசர்கள் கல் அடித்தளத்தில் வீற்றிருப்பது உட்பட 27 புராதான பொருட்கள் புனோம் பென்னுக்கும், மூன்று பொருட்கள் ஜகார்த்தாவிற்கும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

சுபாஷ் கபூர்; கும்பகோணம் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரப்பட்டபோது
சுபாஷ் கபூர்; கும்பகோணம் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரப்பட்டபோது

இந்த பழங்கால பொருட்களை சட்டவிரோதமாக கடத்தியதாக இந்திய அமெரிக்கரான சுபாஷ் கபூர் மற்றும் அமெரிக்கரான நான்சி வீனர் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுபாஷ் கபூர், தென்கிழக்கு ஆசியாவில் திருடப்பட்ட பொருட்களை தனது மன்ஹாட்டன் அருங்காட்சியகத்தில் விற்பனை செய்ததில் சிக்கினார். இவருக்கு எதிராக இந்தியாவுக்கு வெளியே அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளிலும் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

ஹாட்ரிக் வெற்றி... உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கப் பதக்கங்கள்!

700 ஹெக்டேர் நாசம்; நைனிடால் நகரை நெருங்கியது காட்டுத் தீ: இந்திய ராணுவம் விரைந்தது!

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி 8 வயது சிறுமி மரணம்... வீட்டில் தனியாக இருந்தபோது விபரீதம்

ஆமாம்... தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து இருக்கிறது... இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி!

தனியார் கம்பெனியின் ஆசிட் தொட்டியில் விழுந்து தொழிலாளி மரணம்... சென்னை அருகே சோகம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in