நக்சல் தாக்குதலில் 7 போலீஸார் பலி... 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது!

கைது செய்யப்பட்ட கோட்டகெரே சங்கர்
கைது செய்யப்பட்ட கோட்டகெரே சங்கர்
Updated on
2 min read

காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தி 7 பேரை கொன்று துப்பாக்கி, தோட்டாக்களைக் கொள்ளையடித்த வழக்கில் 19 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்சலைட் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம், தும்கூர் மாவட்டம், பாவகடா தாலுகாவின் வெங்கடம்மனஹள்ளியில் உள்ள காவல் நிலையம் மீது கடந்த 2005-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி 300-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டு வீசியும் நக்சலைட்டுகள் இந்த தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலின் போது பணியில் இருந்த 7 போலீஸார் பலியாகினர். மேலும் 5 போலீஸார் படுகாயமடைந்தனர்.

நக்சலைட்டுகள்
நக்சலைட்டுகள்

இந்த தாக்குதலில் காவல் நிலையம் முன்பாக நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஓட்டுநரும் உயிரிழந்தார். திடீரென தாக்குதல் நடத்தியதுடன் காவல் நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை நக்சலைட்டுகள், கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக பாவகடா தாலுகாவில் உள்ள காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 32 பேருக்கு எதிராக பாவகடா ஜேஎம்எஃப்சி நீதிமன்றம், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த கோட்டகெரே சங்கர் போலீஸாரிடம் நேற்று இரவு சிக்கினார். பெங்களூரு கவுரிபாளையத்தில் வசித்து வந்த கோட்டகெரே சங்கரை தும்கூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அசோக் தலைமையில் சென்ற போலீஸார், கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கோட்டகெரே சங்கர் பெங்களூரு மாநகராட்சியில் (பிபிஎம்பி) ஓட்டுநராக பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது.

இதையும் வாசிக்கலாமே...


தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்... மிகக் கனமழை கொட்டும் என அறிவிப்பு!

அதிர்ச்சி... பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்... பதற்றத்தில் என்ஐஏ அலுவலகம்... தீவிர விசாரணை!

சவுக்கு சங்கரை விடாதீங்க... கள்ளக்குறிச்சி மாணவி தாய் போலீஸில் பரபரப்பு புகார்!

வடமாநிலங்களில் புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள்... கங்கை, யமுனை கரைகளில் குவிந்த மக்கள்!

பிரியாவிடை பெற்றார் தினேஷ் கார்த்திக்... வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in