வெர்சா காரில் வந்த முகமூடி கொள்ளைக் கும்பல்... துப்பாக்கி முனையில் ரூ.40 லட்சம் கொள்ளை!

வெர்சா காரில் வந்த முகமூடி கொள்ளைக் கும்பல்... துப்பாக்கி முனையில் ரூ.40 லட்சம் கொள்ளை!

பெங்களூருவில் முகமூடி அணிந்த கும்பல் துப்பாக்கி முனையில் டாக்டரிடமிருந்து ரூ.40 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. நேற்று இரவு டாக்டர் ஒருவரிடம் துப்பாக்கி முனையில் ரூ.40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு சககர் நகரில் காவேரி பள்ளிக்கு பின்புறம் டாக்டர் உமாசங்கர் என்பவரது வீடு உள்ளது. நேற்று இரவு டாக்டர் உமாசங்கர் அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது.

அப்போது வெர்னா காரில் முகமூடி அணிந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. திறந்து கிடந்த உமாசங்கர் வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்துள்ளது. அப்போது கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய உமாசங்கர், வீட்டிற்குள் முகமூடி கொள்ளையர்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அவரைப் பார்த்த கும்பல் துப்பாக்கியை காட்டி மிரட்டியது. இதன்பின் அவர் வீட்டில் இருந்த ரூ.40 லட்சத்தை அந்த கும்பல் கொள்ளையடித்து விட்டுத் தப்பிச் சென்றது. இந்த சம்பவம்குறித்து கொடிகேஹள்ளி போலீஸாருக்கு, டாக்டர் உமாசங்கர் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீஸார், மோப்பநாய் உதவியுடன் சோதனையிட்டனர். அத்துடன் கைரேகை நிபுணர்கள் வந்து பீரோ உள்ளிட்ட இடங்களில் இருந்து கேரேகைகளைப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சககர் நகரில் வெர்னா காரில் வந்த ஒரு கும்பல், வீடு புகுந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது. அந்த கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த திருட்டுக் கும்பலால் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளைச்சம்பவங்களால் சககர் நகர் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

டி20 உலகக்கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் அறிவிப்பு... கொண்டாடும் ரசிகர்கள்!

துரத்தும் தோல்விகள்... பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இன்று 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்.... மஞ்சள் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி!

சவுதி மன்னருக்கு திடீர் உடல்நலக்குறைவு... இப்போது எப்படியிருக்கிறார்?

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்... அதிர்ச்சி வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in