மதுரை வங்கியில் வேலை செய்கிறேன்... பெங்களூரு பெண்ணை ஏமாற்றி பணம் பறித்தவர் கைது!

கைது செய்யப்பட்ட தீபக்.
கைது செய்யப்பட்ட தீபக்.

மதுரையில் வங்கி ஊழியராக பணியாற்றுவதாக பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு
பெங்களூரு

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ஜே.பி. நகரைச் சேர்ந்த 41 வயது பெண் திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்த்து வந்தார். இந்த நிலையில், மேட்ரிமோனி செயலி மூலம் தீபக் என்பவர் அறிமுகமானார். மதுரையில் வங்கி ஊழியராக இருப்பதாக கூறிய தீபக், பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறினார்.

இதன் பின் இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்தனர். இந்த நிலையில், திடீரென மார்ச் 3-ம் தேதி அந்த பெண்ணை தொலைபேசியில் அழைத்த தீபக், தனது பணப்பை தொலைந்து விட்டதாக கூறியுள்ளார். தனக்கு அவசரமாக ரூ.30 ஆயிரம் தேவை என்றும், வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதை நம்பி, அந்த பெண் 30 ஆயிரம் ரூபாயை அவரது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துள்ளார். சில நாட்களுக்குப் பின் அந்த பெண்ணை தொலைபேசியில் அழைதத தீபக், தன் பயன்படுத்தும் செல்போன் எண், அலுவலகம் தந்தது. அதனால், தனிப்பட்ட முறையில் பேசமுடியவில்லை.

எனவே, சிம் கார்டு வாங்கிக் கொடுங்கள் என்று அந்த பெண்ணிடம் தீபக் கூறியுள்ளார். தான் அனுப்பும் ஆபீஸ் பையனிடம் சிம்கார்டை கொடுத்து விடச் சொன்னார் அதன்படி தீபக் பெயரில், அந்த பெண் சிம் கார்டு வாங்கித் தந்துள்ளார்.

இந்த சம்பவங்கள் அனைத்திலும் சந்தேகமடைந்த அந்த பெண், இது குறித்து தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். அப்போது நடைபெற்ற விசாரணையில்,திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தீபக் பல பெண்களிடம் பணம் மற்றும் சிம்கார்டு வாங்கி ஏமாற்றியது தெரிய வந்தது.

இதுகுறித்து ஜே.பி. நகர் காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட பெண் புகார் குறித்தார். இப்புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், தீபக் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு கைது செய்தனர். அவர் எத்தனை பெண்களிடம் இப்படி பணமோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...   


சென்னை போலீஸாருக்கு குட்நியூஸ்... இன்று முதல் தபால் வாக்குகளைச் செலுத்தலாம்!

தமிழகத்தை 2 நாட்கள் வலம் வருகிறார் அமித் ஷா... நாளை முதல் ரோடு ஷோ, பிரச்சாரம்!

சத்துணவு திட்டத்தின் வித்தகர் பி.எஸ்.ராகவன் காலமானார்!

கேரள தேவாலயங்களில் 'மணிப்பூர் ஸ்டோரி' ஆவணப்படம் திரையிடல்... கடும் கொந்தளிப்பு!

அரசு செலவில் கட்சிக்கு ஆதரவான விளம்பரமா?... அச்சகங்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in