வாக்களிக்க சென்றவர் மீது துப்பாக்கிச்சூடு... தேர்தல் நாளில் பரபரப்பு!

வாக்களிக்க சென்றவர் மீது துப்பாக்கிச்சூடு... தேர்தல் நாளில் பரபரப்பு!

மத்திய பிரதேசத்தில் இன்று மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைப்பெற்று வரும் நிலையில், வாக்களிக்க சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று 9 மக்களவைத் தொகுதிகளில் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிந்த் மற்றும் தாட்டியா மாவட்டங்களை உள்ளடக்கிய பிந்த் மக்களவைத் தொகுதியில் காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு

இந்த நிலையில் அங்குள்ள பிடிஐ சாலையில் ராகவேந்திரா கட்டிக் என்ற இளைஞர் தனது வாக்கினை செலுத்துவதற்காக வாக்குப் சாவடி மையத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மகாவீர் நகர் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், ராகவேந்திரா மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் வயிற்றில் துப்பாக்கி கொண்டு பாய்ந்து அதே இடத்தில் ராகவேந்திரா சரிந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் அவர் குவாலியரில் உள்ள தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ம.பி., மாநில தேர்தல் ஆணையர் அனுபம் ராஜன்
ம.பி., மாநில தேர்தல் ஆணையர் அனுபம் ராஜன்

இந்த சம்பவம் வாக்குச்சாவடி மையத்திலிருந்து 400 மீட்டருக்கு அருகிலேயே நடைபெற்றுள்ளதால் வாக்காளர்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மாநில தேர்தல் ஆணையர் அனுபம் ராஜன், இந்த சம்பவத்திற்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளார். ஏற்கனவே ராகவேந்திராவிற்கும் மற்றொரு குழுவினருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. அந்த முன் விரோதத்தில் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், மற்றபடி தேர்தல் அமைதியாக நடைபெற்று வருவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!

இளையராஜா இசை தயாரிப்பாளருக்குத்தான் முழு சொந்தம்... தமிழ்பட இசையமைப்பாளர் பேட்டி!

பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்திச் சென்று பீர் பாட்டில்களால் தாக்குதல்... வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

அதிர்ச்சி... வெயிலில் சுருண்டு விழுந்து தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in