‘மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் கொல்வேன்...’ பிரதமர் மோடிக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிவு

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

சமூக ஊடகத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்ததாக, கர்நாடகாவை சேர்ந்த ஒரு நபர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

‘மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோரை கொல்வேன்’ என ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எதிராக கர்நாடகா போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

யோகி ஆதித்யநாத் மற்றும் மோடி
யோகி ஆதித்யநாத் மற்றும் மோடி

கர்நாடக மாநிலம் யாத்கிரி மாவட்டம் ரங்கம்பேட்டையை சேர்ந்தவர் முகமது ரசூல். இவர் கையில் வாளேந்தி ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் பிரதமர் மோடி மற்றும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்திருந்தார். இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட சுர்பூர் காவல் நிலைய போலீஸார், முகமது ரசூலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

‘எதிர்வரும் மக்களவை தேர்தலில் வென்று காங்கிரஸ் சார்பிலான ஆட்சி மத்தியில் அமையட்டும்; மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோரை கொல்கிறேன்’ என்றபடி கையில் கூர்மையான வாள் போன்ற ஆயுதத்துடன் அந்த வீடியோவில் முகமது ரசூல் மிரட்டல் விடுத்திருந்தார். இது தவிர்த்து பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக அவதூறு விளைவிக்கும் வகையில் அவர் அந்த ஃபேஸ்புக் வீடியோவில் அவர் பேசியிருந்தார்.

“மொபைலில் செல்ஃபி வீடியோ எடுத்த ரசூல், அந்த வீடியோவில் கொலை மிரட்டல் விடுத்ததோடு பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்” என விசாரணை மேற்கொண்டு வரும் போலீஸார் தெரிவிக்கின்றனர். போலீஸ் விசாரணையில் முகமது ரசூல், ஹைதராபாத்தில் தினசரி கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருவதாக தெரிய வந்துள்ளது.

ஃபேஸ்புக்கில் கொலை மிரட்டல் விடுத்த முகமது ரசூல்
ஃபேஸ்புக்கில் கொலை மிரட்டல் விடுத்த முகமது ரசூல்

சமூக ஊடகவாசிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் சிலர் அளித்த புகார்களின் அடிப்படையில், சூர்பூர் போலீஸார் முகமது ரசூல் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 505 (1) (பி), 25 (1) (பி) மற்றும் ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மிரட்டல் வீடியோ வெளியிட்ட முகமது ரசூல், போலீஸார் விசாரிப்பதை அறிந்ததும் தலைமறைவானார். அவரை சுர்பூர் மற்றும் ஹைதாராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு முதல் போலீஸார் தேடி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி... 7 மாநிலங்களில் NIA தீவிர சோதனை!

எம்ஜிஆர் பிரச்சாரத்தையும் மீறி அதிமுக வேட்பாளரை தோற்கடித்த இரட்டை இலை... 1977 தேர்தல் சுவாரஸ்யம்!

அதிரடி... ஸ்பாட்டிஃபை வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ16,500 கோடி அபராதம்!

காதல் மனைவி தற்கொலை... வேதனையில் ஆசிட் குடித்து கணவர் உயிரை விட்ட பரிதாபம்!

அதிர வைத்த 'ஆபரேஷன் லோட்டஸ்'... காங்கிரஸ் கூண்டோடு காலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in