கரூரில் பாலியல் தொழிலாளியின் வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக, மதுபோதையில் பெண்கள் இருந்த வீட்டு கதவைத் தட்டிய வாலிபரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாநகரின் மையப்பகுதியில் வேம்பு மாரியம்மன் கோயில் அருகில் நல்லதங்கால் ஓடைத் தெரு அமைந்துள்ளது. இங்கு ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் பெண்கள் மதிய வேளையில் வீட்டிலிருந்த போது, போதையில் இருந்த வாலிபர் ஒருவர் அங்கிருந்த ஒரு வீட்டின் கதவை தட்டியுள்ளார்.
வீட்டில் இருந்த பெண்மணியிடம், ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகவும் தான் வழக்கமாக வந்து செல்லும் பாலியல் தொழிலாளியின் வீடு தானே இது எனவும் அவர் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்மணி உடனடியாக கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி அந்த நபரை பிடித்து மின் கம்பம் ஒன்றில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கரூர் போலீஸார் அந்த வாலிபரை மீட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் வரவனை பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (35) என்பது தெரியவந்தது. திருமணமாகாத சதீஷ்குமார், அடிக்கடி கரூருக்கு வருகை தந்துள்ளார். அப்போது பாலியல் தொழிலாளி ஒருவரின் தொடர்பு கிடைத்துள்ளது. அவருக்கு செல்போன் மூலம் அழைத்த போது, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள வீட்டிற்கு வருமாறு அந்த பெண் கூறியுள்ளார். இதனை அடுத்து சதீஷ்குமார் மது போதையில் அங்கு வந்தபோது, வீடு மாறி சென்றதால் இந்த குழப்பம் நேர்ந்தது தெரியவந்தது. சமீபகாலமாக குடியிருப்பு பகுதிகளில் பாலியல் தொழில் அதிகரித்து வருவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மர்ம நபர்கள் அடிக்கடி வந்து செல்வதாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த போதும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதையும் வாசிக்கலாமே...
நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!
பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!
அதிர்ச்சி... அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்தது சீனா!
கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை; கொண்டாட்டம் தான்... மனம் திறந்த தமன்னா!
நடத்தையில் சந்தேகம்... மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த வாலிபர்!