பத்திரிகையாளர், பெண் உள்பட 4 பேர் மீது தாக்குதல்... அமைச்சரின் மகன் மீது வழக்கு: 4 போலீஸார் சஸ்பெண்ட்!

மத்தியப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் உள்பட 4 பேர் மீது தாக்குதல்
மத்தியப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் உள்பட 4 பேர் மீது தாக்குதல்

மத்தியப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் உள்பட 4 பேரை தாக்கிய அம்மாநில அமைச்சர் நரேந்திர சிவாஜி படேலின் மகன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அமைச்சரின் மகனை தாக்கியதாக 4 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அமைச்சர் நரேந்திர சிவாஜி படேல்
அமைச்சர் நரேந்திர சிவாஜி படேல்

மத்தியப் பிரதேசம் மாநிலம், போபாலில் நேற்று முன்தினம் இரவு, காரில் வந்த ஒரு கும்பல், திடீரென ஒரு பைக்கில் வந்த நபரை வழிமறித்து தாக்கினர். அப்போது அந்த இடத்தின் முன்பு உள்ள உணவக உரிமையாளரான ஒரு பெண் ஓடி வந்து தாக்குதல் நடத்தியவர்களைத் தடுக்க முயன்றார்.

அப்போது அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தலையில் இரும்பு கம்பியால் தாக்கினர். இதையடுத்து அந்த பெண்ணைக் காப்பாற்ற ஓடிவந்த அவரது கணவர் மற்றும் உணவகத்தில் வேலை செய்யும் ஊழியர் ஆகியோரையும் அந்த கும்பல் தாக்கியது. பின்னர் பாதிக்கப்பட்ட அனைவரும் ஷாபூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். அங்கு விசாரணையில் பைக்கில் வந்த நபர் பத்திரிகையாளர் வைபெக் சிங் என்பது தெரியவந்தது.

அபிக்யான்
அபிக்யான்

மேலும், அவரை தாக்கியது அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நரேந்திர சிவாஜி படேலின் மகன் அபிக்யான் (30) மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 4 பேரும் போலீஸாரால், மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். அப்போது, அபிக்யான் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் அங்கு வந்து 4 பேரையும் தாக்கினர்.

பின்னர் போலீஸார் தலையிட்டு அவர்களைக் காப்பாற்றினர். அதைத் தொடர்ந்து அபிக்யான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், போலீஸார் தன்னையும், தனது ஆதரவாளர்களையும் தாக்கியதாக அபிக்யான் குற்றம்சாட்டினார். அவரது ஆதரவாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சரின் மகனை தாக்கியதாக 2 காவல் துறை அதிகாரிகள் உள்பட 4 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போபால் போலீஸ் கமிஷனர் ஹரிநாராயணன் சாரி மிஸ்ரா கூறுகையில், “இடைநீக்கம் செய்யப்பட்ட போலீஸார், குற்றம் சாட்டப்பட்டவர்களை பெல்ட்டால் அடித்தனர். அதன்பேரில் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.

இதற்கிடையே, அமைச்சர் மகனால் தாக்குதலுக்கு உள்பட்ட பத்திரிகையாளர் உள்ளிட்ட 4 பேரை அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஜித்து பட்வாரி சந்தித்துப் பேசினார். மேலும், அவர்கள் மீதான தாக்குதல் சம்பவ கண்டனம் தெரிவித்த அவர், “அமைச்சரின் மகன் அதிகாரத்தைப் பயன்படுத்தி போலீஸாரை நடவடிக்கை எடுக்க விடாமல் அழுத்தம் கொடுத்துள்ளார். பாஜக ஆட்சியில் மாநிலத்தில் அராஜகம் நடக்கிறது" என குற்றம்சாட்டினார்.

இதையும் வாசிக்கலாமே...

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது... மாதத்தின் முதல் நாளில் மகிழ்ச்சி!

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு... புதிய நிதி ஆண்டு இன்று தொடக்கம்!

தமிழக பாஜக அலுவலகம் குற்றவாளிகளின் சரணாலயம்... அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்குதல்!

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்... ஏப்ரல் 9-ம் தேதி சென்னை வருகிறார்!

ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்... ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in