ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சம்... லாலு மனைவி, மகள்களுக்கு இடைக்கால ஜாமீன்!

ராப்ரி தேவி, மிசா பாரதி, ஹேமா யாதவ்
ராப்ரி தேவி, மிசா பாரதி, ஹேமா யாதவ்

ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மனைவி மற்றும் மகள்களுக்கு டெல்லி நீதிமன்றம் இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது.

கடந்த 2004-09-ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி ஆட்சியில் ரயில்வே துறை அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது ரயில்வே பணி வழங்குவதற்காக பீகாரைச் சேர்ந்த சிலரிடம் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

லஞ்சம் பெற்ற நிலங்களை லாலு பிரசாத் யாதவ் தனது மனைவி ராப்ரி தேவி, மகள்கள் மிசா பாரதி, ஹேமா யாதவ் உள்ளிட்டோர் பெயர்களில் பதிவு செய்துகொண்டதாகக் கூறப்பட்டது.

இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம்
டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம்

இந்நிலையில் ராப்ரி தேவி, அவரது மகள்கள் மிசா பாரதி, ஹேமா யாதவ் ஆகியோர் நேரில் ஆஜராக, டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. அதன்பேரில் நீதிமன்றத்தில் மூவரும் இன்று நேரில் ஆஜராகினர் .

வழக்கு விசாரணையின்போது, ராப்ரி தேவி உள்ளிட்ட மூவருக்கும் ஜாமீன் கோரப்பட்டது. அமலாக்கத் துறை சார்பில், வழக்கமான ஜாமீன் மனு மீதான வாதங்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் தேவை என தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாித்த சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, ராப்ரிதேவி உள்ளிட்ட மூவருக்கும் வரும் 28-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் வாசிக்கலாமே...


கடன் தீர்க்கும்... அமாவாசை தினத்தில் இந்த மந்திரத்தைச் சொல்ல மறக்காதீங்க!

சென்னையில் பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை!

சட்டவிரோத மதரஸா, மசூதி இடிப்பு: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி; 250 பேர் படுகாயம்!

பிப்ரவரி 21ம் தேதி வரை நெல்லை வழிதடத்தில் இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு... வீல்சேரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in