கேரளாவில் அதிர்ச்சி... தொடரும் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் தற்கொலை!

தற்கொலை செய்து கொண்ட கே.எஸ்.ஆர்.டி.சி., நடத்துநர் அனீஷ்
தற்கொலை செய்து கொண்ட கே.எஸ்.ஆர்.டி.சி., நடத்துநர் அனீஷ்

கேரள மாநில போக்குவரத்து துறையில் பணியாற்றி வந்த நடத்துநர் ஒருவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து துறையில் பணியாற்றி வரும் ஊழியர்கள், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பணியில் ஏற்படும் கடுமையான மன உளைச்சல் காரணமாக அவர்கள் இந்த முடிவை மேற்கொள்வதாக சக ஊழியர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த வாரம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த விஜீஷ் என்ற ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட அதே நேரத்தில் அவரது மனைவி ராஜி என்பவரும் மினி பேருந்து முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருந்தார்.

தற்கொலை செய்து கொண்ட விஜீஷ், ராஜி தம்பதி
தற்கொலை செய்து கொண்ட விஜீஷ், ராஜி தம்பதி

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் விஜீஷிற்கு கடும் பண நெருக்கடி இருந்ததால், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மற்றும் ஒரு அதிர்ச்சி சம்பவமாக கே.எஸ்.ஆர்.டி.சி., நிறுவனத்தில் பணியாற்றி வந்த நடத்துநர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த அனிஷ் (38) என்பவர் கே.எஸ்.ஆர்.டி.சி., நிறுவனத்தில் நடத்துநராக பணியாற்றி வந்தார். கடந்த சி நாட்களுக்கு முன்பு இவரை காசர்கோடு பகுதிக்கு பணியிடமாற்றம் செய்ததாக தெரிகிறது. பணியிட மாற்றம் செய்யப்பட்ட சமயத்தில் இருந்தே அனீஷ் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அவரது குடும்பத்தினரிடமும் அவர் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்த அனீஷிடமிருந்து எந்த தகவலும் இல்லாததால், அவரது உறவினர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கே.எஸ்.ஆர்.டி.சி., பேருந்துகள்
கே.எஸ்.ஆர்.டி.சி., பேருந்துகள்

போலீஸார் காசர்கோடு பகுதியில் விசாரணை நடத்திய போது, அவர் அங்கு இல்லை என்பதும், சொந்த ஊரான கோழிக்கோட்டுக்கு திரும்பியதும் தெரியவந்தது. இதையடுத்து கோழிக்கோடு பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது தனியார் தங்கும் விடுதி ஒன்றில் அனீஷ் தங்கி இருந்ததும், அவரது அறை பூட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது. அனீஷ் தங்கி இருந்த அறை இரண்டு நாட்களாக பூட்டப்பட்டிருந்ததால், போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அனீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அனிஷின் தற்கொலைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதே காரணம் என, அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாகவும் தற்போது போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து போக்குவரத்து கழக ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டு வருவது கே.எஸ்.ஆர்.டி.சி., நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இதர பணியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

6 மாதங்களுக்கான உணவுப்பொருள், டீசல் உடன் குவியும் விவசாயிகள்; தேர்தல் நெருக்கத்தில் கோரிக்கைகள் ஈடேறுமா?

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்... உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது: கார்கே விளாசல்!

வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!

பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in