கோடநாடு எஸ்டேட்டை நீதிபதி பார்வையிட வேண்டும்... வழக்கில் இருப்பவர்கள் திடீர் கோரிக்கை!

கோடநாடு எஸ்டேட்
கோடநாடு எஸ்டேட்

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. எனவே, நீதிபதி நேரில் சென்று எஸ்டேட்டைப் பார்வையிட வேண்டும் என குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. அப்போது காவலாளி ஓம்பகதூர் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸார் வழக்குப்பதிவு செய்து சயான், மனோஜ் உட்பட பத்துக்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர்.

இந்த வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழ்நாடு அரசு கடந்தாண்டு உத்தரவிட்டது.

நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம்
நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம்

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகானும் ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீஸாரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாளையாறு மனோஜ் உள்ளிட்டோர் ஆஜராகி இருந்தனர்.

அப்போது, திருச்சி மற்றும் பல இடங்களில் ஆய்வு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான அறிக்கைகளுக்காக காத்திருப்பதால் அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில், ’சம்பவம் நடந்த பகுதியில் ஆய்வுகள் நடத்த வேண்டும்’ என மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், ”கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை தன்மையைக் குறித்து சிபிசிஐடி போலீஸாரிடம் நீதிபதி கேட்டறிந்தார். வழக்கு தொடர்பாக தொலைத்தொடர்பு சம்பந்தமான அறிக்கைகள் நீதிமன்றத்திற்கு வந்தவுடன் அதன் நகல்களை பெற்றுக்கொண்டு சிபிசிஐடி போலீஸார் மேல் விசாரணை நடத்துவார்கள்” என்றார்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன், ”கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் இப்போது நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் பல்வேறு துறைகளின் ஆய்வுகள் நடக்க இருப்பதால் இன்னும் பல மாற்றங்களும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

எனவே, குற்றம் நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவ இடத்தை நீதிபதி பார்வையிட வேண்டும் என எங்கள் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்வதற்காக வழக்கு 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


கடன் தீர்க்கும்... அமாவாசை தினத்தில் இந்த மந்திரத்தைச் சொல்ல மறக்காதீங்க!

சென்னையில் பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை!

சட்டவிரோத மதரஸா, மசூதி இடிப்பு: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி; 250 பேர் படுகாயம்!

பிப்ரவரி 21ம் தேதி வரை நெல்லை வழிதடத்தில் இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு... வீல்சேரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in