அடகு கடையில் துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை - சென்னையில் அதிர்ச்சி!

துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளையடித்து சென்ற கும்பல்
துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளையடித்து சென்ற கும்பல்

சென்னையில் பட்டப்பகலில் அடகு கடையில் புகுந்து துப்பாக்கி முனையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

சென்னை ஆவடி அடுத்து முத்தாப்புதுப்பேட்டை எல்லையம்மன் நகரில் பிரகாஷ் (33) என்பவர் கிருஷ்ணா ஜூவல்லரி என்ற பெயரில் நகை கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார்.. இன்று காலை வழக்கம் போல் கடைக்கு வந்த பிரகாஷ் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

கொள்ளை நடந்த அடகுகடை
கொள்ளை நடந்த அடகுகடை

இந்நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் சொகுசு காரில் வந்த 4 பேர்‌ கொண்ட கும்பல் ஒன்று கடைக்குள் புகுந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி பிரகாஷை கட்டி போட்டு கடையில் இருந்த 1.50 கோடி‌ ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 5 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து கொண்டு காரில் தப்பி சென்றது.

பிரகாஷின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்துக் கடைக்காரர்கள் பிரகாஷ் கட்டை அவிழ்த்து அவரை மீட்டனர். அதன் பின்னர் பிரகாஷ் இது குறித்து ஆவடி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தன் பேரில் அங்கு வந்த முத்தாப்புதுப்பேட்டை போலீஸார் நகை கடை உரிமையாளர் பிரகாஷிடம் இது குறித்து விசாரணை நடத்தினர்.

கொள்ளையடித்த கும்பல்
கொள்ளையடித்த கும்பல்

மேலும் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பவயிடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தனிப்படைகள் அமைத்து தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நகைக்கடைக்குள்‌ புகுந்து துப்பாக்கி முனையில் கடை உரிமையாளரை மிரட்டி 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   

அடேங்கப்பா ரூ.4,650 கோடி பறிமுதல்... முதற்கட்ட தேர்தலுக்கு முன்பே அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்!

அதிர்ச்சி... அம்பேத்கர் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர் வெட்டிக்கொலை!

பிரதமர் மோடியை பார்க்கச் சென்றவர் உயிரிழப்பு... பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி பலி!

டயர் வெடித்து தலைகீழாக கவிழ்ந்த மணல் லாரி... மணலில் புதைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

ஒபாமாவே அஞ்சு வருஷம் தான்... இடத்தை காலி பண்ணுங்க மோடி... முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஆவேசம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in