தனியார் கல்லூரியில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை... நாமக்கல்லில் பரபரப்பு!

தனியார் கல்லூரியில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை... நாமக்கல்லில் பரபரப்பு!

நாமக்கல்லில் விவேகானந்தா கல்வி குடும்பத்தின் தாளாளர் கருணாநிதி தொடர்பான இடங்கள் உட்பட 18 கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இலையம்பாளையம் பகுதியில் விவேகானந்தா கல்விக் குழுமங்கள் இயங்கி வருகிறது. இந்த குழுமத்தின் கீழ் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை, அறிவியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி என 18க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற முடிந்த மக்களவைத் தேர்தலின் போது, நாமக்கல் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்த கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

விவேகானந்தா குழுமங்களின் தலைவர் கருணாநிதி
விவேகானந்தா குழுமங்களின் தலைவர் கருணாநிதி

இந்த கல்லூரிக் குழுமங்களின் தலைவராக கருணாநிதி என்பவர் உள்ளார். இவர் அதிமுக சார்பில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினராக பதவி வகித்துள்ளார். மேலும் மக்களவையின் முன்னாள் துணை சபாநாயகரான தம்பிதுரையின் நெருங்கிய உறவினர் ஆவார்.

கோவை வருமான வரித்துறை அலுவலகம்
கோவை வருமான வரித்துறை அலுவலகம்

இந்த நிலையில், இன்று சேலம் மற்றும் கோவை மண்டலத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வருகை தந்தனர். தொடர்ந்து இந்த குழுமத்திற்கு சொந்தமான 18 கல்லூரிகளின் வளாகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வருமான வரித்துறை சோதனையால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு... உருகும் ரசிகர்கள்

வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!

கடமை தவறிய இன்ஸ்பெக்டர், பெண் காவலர் சஸ்பெண்ட்... இளம்பெண் கொலை வழக்கில் பரபரப்பு!

கோவை பேருந்தில் சடலமாக மீட்கப்பட்ட ஐ.டி பெண் ஊழியர்... ஓட்டுநர், நடத்துநர் அதிர்ச்சி!

26 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அவசர உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in