தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீசுவது பாஜகதான்... அப்பாவு அதிரடி பேட்டி!

எம்.அப்பாவு
எம்.அப்பாவு

தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட கட்சி தான் பெட்ரோல் குண்டை வைத்து விளையாடுகிறது எனவும் கருக்கா வினோத் உண்மையை சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில் சிலர் சிபிஐ விசாரணை கேட்பதாக நினைக்கிறேன் என்று சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பிற்பகலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்ப முயன்ற கருக்கா வினோத்தை போலீசார், விரட்டிப் பிடித்து கைது செய்தனர். மேலும் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்திடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் குறித்து சபாநாயகர் அப்பாவு நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழ்நாட்டை பொறுத்தவரை உங்களுக்கு தெரியும், இங்கே இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் இதுவரைக்கு பெட்ரோல் குண்டை எடுத்தது எனக்கு நினைவு இல்லை. எனக்கு ஒரு பழைய நினைவு என்றால், பாஜகவினுடைய முக்கிய தலைவர்கள் குறிப்பாக கோவையில் ராமநாதன் என்பவர், திண்டுக்கல்லில் பிரவீன் குமார், திருவள்ளூரில் பரமானந்தம் இவங்க 3 பேரும் பெட்ரோல் குண்டு வீசினர்.

பெட்ரோல் குண்டு
பெட்ரோல் குண்டு

போலீஸ் விசாரணையில் கட்சியில் எங்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கவும், பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்பு கிடைப்பதற்கும் பாதுகாப்பு கோரியும் பெட்ரோல் குண்டு வீசியதாக விசாரணையில் சொல்லியிருக்கிறார்கள். இதேபோல் இந்து மக்கள் கட்சி 2018ல் திருவள்ளூரில் காளிகுமார் என்பவர், 2020ல் திருப்பூரில் பரமன்நந்து என்று நினைக்கிறேன். அதைபோல திருச்சி பக்கத்தில் சக்திவேல்... இந்த மூன்றுபேரும் இந்து மக்கள் கட்சியில் இருந்து.. ஒருத்தர் பைக்கை எரிக்க சொல்கிறார். இன்னொருவர் காரை எரிக்க சொல்கிறார். ஒருவர் அவரது நண்பரை வைத்தே வெட்ட சொல்கிறார். மூன்று பேரது ஸ்டேட்மண்டுமே... கட்சியினுடைய கவனத்தை ஈர்க்க வேண்டும். நாங்க முக்கியமான ஆள் என தெரியவேண்டும் என்பதற்கு தான் நடந்து இருக்கிறது.

நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். இந்த ஆறு சம்பவத்தையும் நீங்க என்ன சொல்கிறீர்கள். அது கூட இந்த கருக்கா வினோத்... 4 சம்பவம்.. இந்த 10 சம்பவங்களும் பாஜக அல்லது இந்து மக்கள் கட்சி திட்டமிட்டு தமிழ்நாட்டில் திட்டமிட்டு அமைதியை சீர்குலைக்க வேண்டும். வன்முறையை தூண்ட வேண்டும் என்பதுதான்” என்றார்

மேலும், “உங்களுக்கு இன்னொன்றும் தெரியும். வெளிமாநில தொழிலாலாளர்களை தமிழ்நாட்டில் அடித்து விரட்டுகிறார்கள் என்று கலவர சம்பவம் சமூக வலைதளங்களில் போடப்பட்டது. அதுவும் பாஜக பின்னணியில் தான் நடந்தது. நான் அரசியலுக்காக பேசவில்லை. கட்சிக்காக பேசவில்லை. ஆளுநர் மாளிகை முன்பு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். ஏற்கனவே இந்த கருக்கா வினோத் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதில் அவர்களுக்கு உள்ளேயே பல பேர் இருப்பதாக சொல்கிறார்கள். அது எனக்கு தெரியாது. ஆனால் விசாரித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட இயக்கம், குறிப்பிட்ட கட்சி மட்டுமே பெட்ரோல் குண்டு வைத்து விளையாடுகிறார்கள்.

ரவுடி கருக்கா வினோத்
ரவுடி கருக்கா வினோத்

இதை வைத்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதற்கான முயற்சியோ என நான் சொல்லவில்லை. வெகுஜன மக்கள் சொல்கிறார்கள். கருக்கா வினோத்தை நீதிமன்ற காவலுக்குதான் அனுப்பியிருக்கிறார்களே தவிர ஜாமீனில் விடவில்லை. யாரை எப்படி விசாரிக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். இப்போ கூட சிபிஐ விசாரணை வேண்டும் என்று பல பேர் கேட்கிறார்கள். இதில் எனக்கு என்ன முரண்பாடு இருக்கிறது என்றால், இவர் உண்மையை சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில் சொல்கிறாரோ என்று நினைக்கிறேன்” இவ்வாறு அவர் பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in