காசாவை அடுத்து ரஃபா மீது குறி... பாலஸ்தீன மண்ணில் அடுத்த பெரும் தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்

கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் கூடாரங்கள் - செயற்கைக்கோள் படம்
கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் கூடாரங்கள் - செயற்கைக்கோள் படம்

காசாவை அடுத்து ரஃபா மீதான மிகப்பெரும் தாக்குதலுக்காக தயாராகி வருகிறது இஸ்ரேல். இதனால் பாலஸ்தீன மக்கள் மத்தியிலான வேதனை ஓலம் குறையும் என்ற எதிர்ப்பார்ப்புகள் பொய்த்துள்ளன.

கடந்தாண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் ஆயுதக்குழுவின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு, பழிவாங்கத்துடித்த இஸ்ரேலின் பதிலடி இன்னமும் நின்றபாடில்லை. ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 250 பேர் கடத்திச் செல்லப்பட்டனர். இதற்கான பழிவாங்கல் தாக்குதல்களில், இஸ்ரேல் இதுவரை சுமார் 34,000 பாலஸ்தீனியர்களைக் கொன்று குவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் சிறார் மற்றும் பெண்களை உள்ளடக்கிய அப்பாவிகள்.

ரஃபா பகுதியில் ஹமாஸ் - இஸ்ரேல் படை இடையே மோதல்
ரஃபா பகுதியில் ஹமாஸ் - இஸ்ரேல் படை இடையே மோதல்

இத்தனை உயிர்ப்பலிகளுக்கு பின்னர் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தணியும், அங்கே அமைதி திரும்பும் என்ற சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பில் மண் விழுந்துள்ளது. காசாவை சிதிலமாக்கிய இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அடுத்தபடியாக ரஃபா நகரை குறிவைத்துள்ளன. அந்த நகரின் மீதான பெரும் தாக்குதலுக்கு கடந்த சில தினங்களாக இஸ்ரேல் தீவிரமாக தயாராகி வருகிறது.

இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்த ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக அழித்தொழிப்பது என்ற நோக்கத்தின் அடுத்த கட்டமாக ரஃபா நகரை இஸ்ரேல் குறிவைத்துள்ளது. ரஃபா என்பது காசாக்கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பாலத்தீனிய நகரம். ரஃபா ஆளுநரகத்தின் தலைநகராக விளங்கும் இந்த நகரம், காசா நகருக்கு தென்மேற்கே 30 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.

கடந்த சில தினங்களாக காசா மீதான தனது இறுதித்தாக்குதலை அதிகரித்து வந்த இஸ்ரேல், அடுத்தபடியாக ரஃபா நோக்கி திரும்புகிறது. இதற்காக கான் யூனிஸ் அருகே புதிய கூடாரங்களை இஸ்ரேல் அமைத்துவருவதை செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்துள்ளன. ஆனால் அவற்றை இஸ்ரேல் மறுத்துள்ளது.

அதே வேளையில் தங்கள் மீது ட்ரோன் தாக்குதல்களை நிகழ்த்திய இரானுக்கு இன்னமும் பதிலடி தராது இஸ்ரேல் காலம்தாழ்த்துவதும் மத்திய கிழக்கில் ஆச்சரியத்தை தந்துள்ளது. ஆனால், இரான் ஆதரவிலான காசாவின் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் மீது முன்னெப்போதையும் விட அசுரத் தாக்குதலை அதிகரித்துள்ளது. இரான் ஆதரவு ஹமாஸ் ஆயுதக் குழுவினர் மீதான தாக்குதலையும், இரானுக்கு எதிரான போர் நடவடிக்கையாகவே இஸ்ரேல் கருதுவதே இதற்கு காரணம்.

காசா கரையில் விரையும் இஸ்ரேல் டாங்கிகளில் ஒன்று
காசா கரையில் விரையும் இஸ்ரேல் டாங்கிகளில் ஒன்று

இதன்படி பாலஸ்தீன பகுதியில் ஹமாஸ் ஆயுதக் குழுவினரை நிர்மூலம் செய்த பின்னரே, இரானுக்கு எதிரான பதிலடியை இஸ்ரேல் பரிசீலிக்கும். ஆனால், இரான் ஆதரவு போராளிகளின் சிரியா மற்றும் லெபனான் மீது வழக்கம்போலவே அவ்வபோது தனது தாக்குதலை இஸ்ரேல் தொடரும் எனவும் தெரிய வருகிறது.

இவற்றின் மத்தியில் ரஃபா மீதான இஸ்ரேலின் அடுத்தக்கட்ட தாக்குதல், அப்பாவி மக்கள் மீதான காசா கொடூரத்தை மீண்டும் அங்கே அரங்கேற்றும் அச்சுறுத்தலை தந்துள்ளது. இஸ்ரேல் தொடர் தாக்குதல் காரணமாக காசாவில் இயல்பு வாழ்க்கையை தொலைத்திருக்கும் பாலஸ்தீன மக்கள், சுகாதார மற்றும் உணவு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். போருக்கு இணையாக உணவு இன்மையால் அங்கே பலியாகும் உயிர்களும் அதிகரித்துள்ள. இந்த சூழலில் ரஃபா நகரை குறிவைத்து இஸ்ரேல் நகர்வது, சர்வதேச அளவில் கவலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட இளைஞர் மீது திடீர் தாக்குதல்... கர்நாடகாவில் அடுத்த சம்பவம்!

அரசுப்பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து... ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்!

அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்... ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி எழுதிய கடிதம் சிக்கியது!

தேர்தல் முன்விரோதத்தில் இரட்டை கொலை... 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு!

சென்னையில் பரபரப்பு... ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in