அதிர்ச்சி...காலையில் ஸ்விக்கி டெலிவரி ஊழியர்: இரவில் பைக் திருடன்!

கைது செய்யப்பட்ட  தீபக்
கைது செய்யப்பட்ட தீபக்

பெங்களூருவில் காலையில் ஸ்விக்கி டெலிவரி ஊழியராக பணியாற்றிய இளைஞர், இரவில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவரிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 5 பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஜேபி நகரில் ஏப்ரல் 14-ம் தேதி நள்ளிரவு 2.25 மணியளவில் ஒரு வீட்டின் முன் நின்ற பைக்கை ஒரு திருடன் திருட முயற்சித்துள்ளார். தான் போட்டிருந்த டி-சர்ட்டால் முகத்தை மூடி கொண்ட அந்த நபர் இரண்டு நிமிடங்களாக ஒரு வீட்டின் முன் நின்ற அந்த பைக்கை சுற்றி முற்றி பார்த்தார். அந்த வாகனம் லாக் செய்யப்பட்டிருந்ததால் அதை அப்படியே பின்னால் இழுத்து வந்த அந்த நபர் காலால் எட்டி உதைத்து லாக்கை உடைக்க முயற்சித்துள்ளார்.

பைக்கை திருட முயற்சிக்கும் தீபக்
பைக்கை திருட முயற்சிக்கும் தீபக்
பைக்கை திருட முயற்சிக்கும் தீபக்
பைக்கை திருட முயற்சிக்கும் தீபக்

ஆனால், அதன் லாக்கை உடைக்க முடியவில்லை. இதனால் பைக்கை அந்த வீட்டின் முன் நிறுத்தி விட்டு அந்த மர்மநபர் சென்று விட்டார். இந்த வீடியோ அந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இதுதொடர்பாக பையப்பனஹள்ளி போலீஸாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்திய போது ஸ்விக்கி டெலிவரி பாயாக வேலை செய்யும் தீபு என்ற தீபக் தான் பைக்கை திருட முயன்றவர் என்பது தெரிய வந்தது. அவரை போலீஸார் இன்று கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது காலையில் ஸ்விக்கி டெலிவரி பாயாக வேலை செய்த தீபக், பைக் எங்கு நிறுத்தப்பட்டுள்ளது என்று நோட்டமிடுவார். இரவில் வந்து அந்த பைக்கை திருடிச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரிய வந்தது.

பைக்கை திருட முயற்சிக்கும் தீபக்
பைக்கை திருட முயற்சிக்கும் தீபக்

திருடப்படும் பைக்குகளை குறைந்த விலைக்கு விற்று விட்டதாக அவர் கூறினார். அவரிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 5 பைக்குகளை பையப்பனஹள்ளி போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீபக்கிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in