நீலகிரியில் அதிர்ச்சி... நெற்றியில் பாய்ந்த தோட்டா; துப்பாக்கியால் காட்டுமாடு சுட்டுக்கொலை!

நீலகிரியில் அதிர்ச்சி... நெற்றியில் பாய்ந்த தோட்டா; துப்பாக்கியால் காட்டுமாடு சுட்டுக்கொலை!

நீலகிரி மாவட்டத்தில் சாலையில் இறந்து கிடந்த காட்டுமாட்டை சந்தேகத்தின் பெயரில் வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்ததில், காட்டுமாட்டின் தலையில் நாட்டு துப்பாக்கியின் தோட்டா இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும். இங்கு காட்டு யானைகள், காட்டு மாடுகள், சிறுத்தைகள், புலிகள், கரடிகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன. அவ்வப்போது வனவிலங்குகள், குடியிருப்பு பகுதிகளின் அருகில் உயிரிழந்து கிடப்பது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள சேலாசிலிருந்து பாலடா செல்லும் சாலையில் காட்டு மாடு ஒன்று தலையில் காயத்துடன் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து குந்தா வனச்சரகர் சீனிவாசன் மற்றும் வனத்துறையினர் கொலகொம்பை காவல் நிலைய போலீஸாருடன் சம்பவ இடத்திற்கு சென்று காட்டுமாடை பார்வையிட்டனர். பின்பு கால்நடை மருத்துவர்கள் பாலமுருகன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் வரவழைக்கப்பட்டு காட்டுமாடு உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது காட்டுமாட்டின் தலையில் இருந்து நாட்டுத் துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் தோட்டா மற்றும் பிளாஸ்டிக்கிலான பொருள் ஒன்றும் அகற்றப்பட்டது. இதைப் பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து காட்டுமாட்டின் உடல் உறுப்புகள் ஆய்வுக்காக தடய அறிவியல் துறை ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

காட்டுமாட்டை இறைச்சிக்காக யாரேனும் வேட்டையாடினார்களா அல்லது முட்ட வந்த போது சுட்டுக்கொன்றுவிட்டு தப்பியோடினார்களா என்ற கோணத்தில் வனத்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

உலகின் நெ.1 கார்ல்சனை வீழ்த்திய தமிழர்.. இளம் சாதனையாளருக்கு குவியும் பாராட்டு!

மீண்டும் வெடித்து சிதறிய வால்நட்சத்திரம்... பூமியை நெருங்கும் ஆபத்து!

லியோ’ விமர்சனம் : இதெல்லாமே பெரிய சறுக்கல்... புலம்பும் ரசிகர்கள்!

வாசகர்களுக்கு ரூ.5,00,000 பரிசு... கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!

அதிர்ச்சி... ரூ.1,000 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கம்! கதறும் நெசவாளர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in