குஜராத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி... 173 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தது கடலோரக் காவல்படை!

173 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ள இந்திய கடலோரக் காவல்படை
173 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ள இந்திய கடலோரக் காவல்படை

குஜராத் கடல் எல்லையில் இந்திய கடலோரக் காவல் படையினர் நடத்திய அதிரடி சோதனையின் போது கப்பலில் கடத்திவரப்பட்ட 173 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இதையடுத்து குஜராத் மாநிலத்தை ஒட்டி உள்ள அரபிக் கடல் பகுதியில் படகுகள் மூலம் கடத்தி வரப்படும் போதைப் பொருட்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் இந்திய கடலோரக் காவல் படை கப்பல் ரோந்துப்பணியில்
அரபிக்கடலில் இந்திய கடலோரக் காவல் படை கப்பல் ரோந்துப்பணியில்

குஜராத் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு, தேசிய போதைப்பொருள் தடுப்பு மையம் மற்றும் இந்திய கடலோரக் காவல் படை ஆகியவை இணைந்து இந்த தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் இயங்கி வந்த போதைப் பொருள் தயாரிப்பு தொழிற்சாலை கண்டறியப்பட்டு மூடப்பட்டது. அங்கிருந்து சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்திய கடலோரக் காவல் படையினர் அரபிக் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பாகிஸ்தானில் இருந்து படகுமூலம் கடத்திவரப்பட்ட 73 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் இரவு 73 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது
நேற்று முன்தினம் இரவு 73 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது

இதைத் தொடர்ந்து மீண்டும் தீவிர கண்காணிப்பு பணியில் இந்திய கடலோரக் காவல் படை ஈடுபட்டு வந்தது. அப்போது பாகிஸ்தானில் இருந்து படகு மூலம் கடத்திவரப்பட்ட 173 கிலோ போதைப் பொருட்களை இன்று இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து அவர்களை போர்பந்தர் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையின் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து குஜராத் அருகே கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in