நெருங்கும் மக்களவைத் தேர்தல்; நெருக்கும் வருமான வரித்துறை... தமிழகத்தில் இன்று 44 இடங்களில் ரெய்டு!

வருமான வரித்துறை
வருமான வரித்துறை

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இன்று மாநிலம் முழுவதும் 44 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று திருநெல்வேலியில் தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்றது திமுக வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியது.

வருமான வரித் துறை
வருமான வரித் துறை

இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 44 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை விருகம்பாக்கம் ரத்னா நகரில் உள்ள ஒரு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோடு பழையபாளையத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வருமான வரி
வருமான வரி

திருப்பூர் அவிநாசியில் குடிநீர் வடிகால் வாரியத்தின் ' அ' பிரிவு, ஒப்பந்ததாரர் வேலுமணி என்பவரின் வீடுகள் மற்றும் அவரின் பெட்ரோல் பங்க், ஆர்.ஓ., வாட்டர் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலி சாலை பணி ஒப்பந்ததாரரும், அதிமுக பிரமுகருமான ஆர்.எஸ்.முருகன் வீடு மற்றும் அலுவலகம் உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழகத்தில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனைகள் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...   

சாதி வாரி கணக்கெடுப்பு... இலவச கல்வி... ஏழை குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

கலக்கும் கருப்பையா... கலங்கும் துரைவைகோ... மலைக்கோட்டையில் மகுடம் யாருக்கு?

பெங்களூருவைத் தொடர்ந்து கேரளாவிலும் குண்டு வெடிப்பு... 2 பேர் படுகாயம்!

48 மணி நேரம் தான் டைம்: சந்திரபாபு நாயுடுவுக்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்!

மத்திய அரசு அதிரடி அறிவிப்பு... இனி குழந்தையின் பிறப்பு பதிவேட்டில் இதுவும் கட்டாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in