தலையில் கல்லைப் போட்டு தொழிலாளி கொலை... சக தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

கோப்புப்படம்
கோப்புப்படம்

முன் விரோதம் காரணமாக சென்னை ரயில் நிலையத்தில் பணிபுரிந்த சக தொழிலாளியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூட்டை தூக்கும் தொழில் செய்து வந்த பூங்காவனம் என்பவருக்கும், அவருடன் வேலை செய்து வந்த அழுக்கு குமார் என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது. அது கைகலப்பாக மாறிய நிலையில் பூங்காவனத்தின் தலையில் மார்பில் கல்லை போட்டு கடந்த 2021ம் ஆண்டு குமார் கொலை செய்தார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து தலைமறைவான குமாரை கைது செய்தனர்.

கொலை
கொலை

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு வழங்கிய 5வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். முருகானந்தம், காவல்துறை விசாரணையில் சிசிடிவி காட்சிகள் மற்றும் 18 சாட்சிகள் சேர்க்கப்பட்டு சாட்சியம் அளித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட குமார் மீதான கொலை குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

மேலும், கொலை செய்யப்பட்ட பூங்காவனத்தின் குடும்பத்துக்கு பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் அரசிடம் இருந்து கிடைக்க சட்ட பணிகள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!

இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!

ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in