விழுந்து நொறுங்கிய இந்திய விமானப்படையின் விமானம்... 2 விமானிகள் உயிர்தப்பிய அதிசயம்!

விமானப்படை பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கி விபத்து
விமானப்படை பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

மேற்கு வங்க மாநிலத்தில் இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில், விமானிகள் இருவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.

மேற்குவங்க மாநிலம் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான கலைக்குந்தா விமான தளம் அமைந்துள்ளது. இங்கிருந்து பயிற்சி விமானிகளுக்கு போர் விமானங்களை ஓட்டுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மதியம் ஹாக் ட்ரெயினர் வகை விமானம் ஒன்று பயிற்சி விமானி மற்றும் பயிற்சியாளருடன், மதியம் 3 மணியளவில் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், டயாசா பகுதியில் உள்ள வேளாண் நிலம் ஒன்றில் மதியம் 3:35 மணி அளவில் விழுந்து நொறுங்கி விபத்திற்கு உள்ளானது. இதில் விமான முற்றிலும் சேதம் அடைந்தது. இருப்பினும் இந்த விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் தக்க நேரத்தில் விமானத்திலிருந்து வெளியேறி பாராசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கினர்.

விபத்திற்குள்ளான ஹாக் ட்ரெய்னர் ரக விமானம்
விபத்திற்குள்ளான ஹாக் ட்ரெய்னர் ரக விமானம்

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் இந்திய விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விமானிகளை பத்திரமாக மீட்டு விமானப்படைத்தளத்திற்கு அழைத்துச் சென்றன. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக விமானப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் விமானிகளும், தரையில் இருந்த பொதுமக்களும் பத்திரமாக உயிர் தப்பினர்.

இதையும் வாசிக்கலாமே...

6 மாதங்களுக்கான உணவுப்பொருள், டீசல் உடன் குவியும் விவசாயிகள்; தேர்தல் நெருக்கத்தில் கோரிக்கைகள் ஈடேறுமா?

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்... உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது: கார்கே விளாசல்!

வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!

பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in