ஆசையாய் வாங்கிய சாக்லேட்டை பிரித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி... எக்ஸ் தளத்தில் குமுறிய நெட்டிசன்!

கெட்டுப்போன சாக்லேட்
கெட்டுப்போன சாக்லேட்

ஹைதராபாத்தில் ஆசையாய் வாங்கிய சாக்லேட் பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது, அதன் உள்ளே பூஞ்சை படர்ந்து இருந்ததை கண்டு வாடிக்கையாளர் ஒருவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

குழந்தைகளின் விருப்பமான சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் உணவுப் பொருட்களுக்கு எக்ஸ்பைரி டேட் எனப்படும் காலாவதியாகும் தினம் அந்தந்த பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டிருக்கும். இருப்பினும் இவற்றை சேமித்து வைக்க பல்வேறு வழிமுறைகளை அந்தந்த நிறுவனங்கள் அறிவுறுத்தி வருகின்றன. ஆனால் சில இடங்களில் மோசமான பராமரிப்பு காரணமாகவும், தயாரிப்பு பணியின் போது ஏற்படும் கவனக்குறைவு காரணமாகவும் அவ்வப்போது இவை கெட்டுவிடுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் தனக்கு விருப்பமான டைரி மில்க் நிறுவனத்தின் கேட்பரிஸ் சாக்லேட்டை வாங்கி உள்ளார். ஜனவரி 2024 ம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாக அதன் மேலே இருந்த கவரில் எழுதப்பட்டிருந்தது. இந்த நிலையில் வீட்டிற்கு வந்து அந்த சாக்லேட்டை பிரித்து பார்த்தபோது அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே இருந்த சாக்லேட்டில் பூஞ்சை படர்ந்திருந்ததோடு அந்த சாக்லேட்டும் கெட்டு போயிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கடை உரிமையாளரிடம் கேட்டபோது உரிய விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த நபர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கடந்த 27ம் தேதி புகைப்படங்களுடன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

கெட்டுப்போன சாக்லேட்
கெட்டுப்போன சாக்லேட்BG

அந்த பதிவின் மீது பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள கேட்பரிஸ் டைரி மில்க் நிறுவனம், ’உங்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவத்திற்கு எங்களது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஒவ்வொரு முறையும் உயர்தரமான உணவுகளை தயாரிப்பதில் நாங்கள் உறுதி கொண்டு உள்ளோம். இது தொடர்பாக எங்களது வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் அளிக்கவும்’ என்று பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனிடையே ராபின் என்ற மற்றொரு நபர் இதே போன்ற கெட்டுப்போன சாக்லேட் தொடர்பாக எக்ஸ் வலைதள பக்கத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், கெட்டுப் போன சாக்லேட்டின் அதே பேட்ச் நம்பரில் உருவான அனைத்து சாக்லேட்டுகளையும் திரும்ப பெறுமாறு கேட்பரிஸ் நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in