'அவன் கூட ஏன் பேசுற?'... கத்தி, கத்திரிக்கோலால் மனைவியைக் குத்திச் சாய்ந்த கணவன் கைது!

'அவன் கூட ஏன் பேசுற?'... கத்தி, கத்திரிக்கோலால் மனைவியைக் குத்திச் சாய்ந்த கணவன் கைது!

ஊழியர் ஒருவருடன் தகாத உறவில் இருப்பதாக சந்தேகம் கொண்ட கணவர், தனது மனைவியை கத்தி, கத்திரிக்கோலால் சரமாரியாக குத்திக்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஜே.பி.நகரின் 5வது நிலை விநாயக் நகரைச் சேர்ந்தவர் நவீன். இவருக்கும் பிந்து என்ற பெண்ணுக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிந்து எச்எஸ்ஆர் லே அவுட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வீட்டுப் பராமரிப்பு வேலை செய்து வந்தார். அவரைப் பார்ப்பதற்காக சக ஊழியர் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதனால், தனது மனைவிக்கும், அவருக்கும் தொடர்பு உள்ளது என்று நவீன் சந்தேகமடைந்தார்.

இதனால் பிந்து போனில் பேசினால், யாருடன் பேசுகிறாய் எனத் தகராறு செய்ய ஆரம்பித்தார். இதனால் 2 ஆண்டுகளாகவே கணவன், மனைவிக்குள் இந்த பிரச்சினை இருந்து வந்துள்ளது. ஏற்கெனவே ஒருமுறை பன்னார்கட்டா வனப்பகுதிக்கு பிந்துவை அழைத்துச் சென்ற நவீன், அங்கு அவரை இரும்புக் கம்பியால் தாக்கிக் கொலை செய்ய முயன்றார். ஆனால், அவரிடமிருந்து பிந்து தப்பி வந்தார். இந்த நிலையில், கடந்த 31-ம் தேதி பிந்துவை சந்திக்க அவருடன் பணியாற்றும் சகஊழியர் வந்துள்ளார்.

இதனால் நவீனுக்கும், பிந்துவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நவீன், கத்தி மற்றும் கத்திரிக்கோலால் பிந்துவை சரமாரியாக குத்தினார். இதனால் படுகாயமடைந்த பிந்து, விக்டோரியா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக புட்டனஹள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த நவீனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  

 குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

அதிர்ச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணி தீவிரம்!

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்... மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை!

வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது... பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு!

தம்பி அண்ணாமலை, மோதிப் பார்ப்போமா?... சவால் விட்ட சீமான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in