மேகாலயாவில் பதற்றம்... சிஏஏ எதிர்ப்பு போராட்டத்துக்குப் பின் இருவர் கொலை!

மேகாலயாவில் 7 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
மேகாலயாவில் 7 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

மேகாலயாவில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்துக்குப் பின்னர் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தால் அங்குள்ள 7 மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு காஸி மலை மாவட்ட எஸ்பி ரிதுராஜ் ரவி

மேகாலயா மாநிலம், கிழக்கு காஸி மலை மாவட்டத்தில் இந்தியா-வங்கதேச சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ளது இச்சாமதி. இப்பகுதியில் காஸி மாணவர் சங்கம் (கேஎஸ்யு) சார்பில், கடந்த வாரம் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்குப் பின்னர், போராட்டம் நடந்த இடத்தில் இருவர் கொலை செய்யப்பட்டனர். அவர்கள் யார் என்ற விவரம் குறித்து காவல் துறை தரப்பில் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்த கொலைகள் தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, கேஎஸ்யு அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர் என்றும் ஷில்லாங்கில் உள்ள மவ்லாய் காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியதால் போலீஸ் வாகனம் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் கிழக்கு காஸி மலை மாவட்ட எஸ்பி-யான ரிதுராஜ் ரவி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தங்கள் அமைப்பைச் சேர்ந்த 2 பேரை கொலை வழக்கில் போலீஸார் கைது செய்ததை கண்டித்து கேஎஸ்யு அமைப்பினர் ஏராளமானோர், உள்ளூர் காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, தங்கள் சங்க உறுப்பினர்களை போலீஸார் வேட்டையாடக் கூடாது. கைது செய்யப்பட்ட இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

கொலை மற்றும் போராட்டங்களை தொடர்ந்து, மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங் உள்பட கிழக்கு எல்லையில் உள்ள 7 மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அம்மாவட்ட எஸ்பி-க்களுக்கு, அம்மாநில துணை ஐஜி-யான டி.என்.ஆர். மாரக் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “பிரச்சினைக்குரிய பகுதிகளில் சில அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபடவும், காவல் நிலையங்கள், காவல் வாகனங்கள், அரசு சொத்துகள், கட்டிடங்களை சேதப்படுத்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

போலீஸ் குவிப்பு
போலீஸ் குவிப்பு

பழங்குடியினர் அல்லாதவர்களையும் போராட்டக்காரர்கள் குறிவைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

சிஏஏ எதிர்ப்பு போராட்டத்துக்குப் பிறகு இருவர் கொல்லப்பட்டது, அதைத் தொடர்ந்து கைது நடவடிக்கை, போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு என அடுத்தடுத்த சம்பவங்கள் நிகழ்வதால் மேகாலயாவின் ஷில்லாங், கிழக்கு காஸி மலை, மேற்கு ஜைண்டியா மலை உள்ளிட்ட மாவட்டங்களில் பதற்றம் நிலவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே... 

குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

அதிர்ச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணி தீவிரம்!

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்... மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை!

வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது... பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு!

தம்பி அண்ணாமலை, மோதிப் பார்ப்போமா?... சவால் விட்ட சீமான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in