சைபர் க்ரைம் புகாரால் 28,200 மொபைல் போன்களுக்கு தடை... மேலும் 20 லட்சம் சந்தேக இணைப்புகளை சரிபார்க்க உத்தரவு

மொபைல் போன்
மொபைல் போன்

சைபர் க்ரைம் புகார்களின் கீழ் 28,200 மொபைல் போன்களை தடை செய்ய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே போன்று சந்தேகத்தின் அடிப்படையில் 20 லட்சம் மொபைல் இணைப்புகளை மீண்டும் சரிபார்க்கவும் உத்தரவிடப்பட்ட்டுள்ளது.

சைபர் கிரைம் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் நாடு முழுவதும் 28,200 கைபேசிகளைத் தடைசெய்யுமாறு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த கைபேசிகளுடன் தொடர்புடைய 20 லட்சம் மொபைல் இணைப்புகளை உடனடியாக மறு சரிபார்ப்பு செய்யவும், மறு சரிபார்ப்பில் தோல்வியுற்றவர்களின் இணைப்பை துண்டிக்கவும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மொபைல் போன்
மொபைல் போன்

உள்துறை அமைச்சகம் மற்றும் மாநில காவல்துறை நடத்திய ஆய்வில், சைபர் கிரைம்களில் 28,200 மொபைல் கைபேசிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. மத்திய அரசியன் தொலைத்தொடர்புத் துறை மேலும் ஆய்வு செய்து, இந்த கைபேசிகளில் 20 லட்சம் எண்கள் பயன்படுத்தப்பட்டதைக் கண்டறிந்தது.

தொலைத்தொடர்புத் துறை, உள்துறை அமைச்சகம் மற்றும் மாநில காவல்துறை ஆகியவை இணைய குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் தொலைத்தொடர்பு வளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க கூட்டு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

"இந்த கூட்டு முயற்சியானது மோசடி செய்பவர்களின் வலைப்பின்னல்களை அகற்றி, டிஜிட்டல் அச்சுறுத்தல்களில் இருந்து குடிமக்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையானது, பொதுப் பாதுகாப்பு மற்றும் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உறுதி செய்வதற்கும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது" என்று அரசு தரப்பில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் க்ரைம் மோசடி
சைபர் க்ரைம் மோசடி

சைபர் கிரைம் மற்றும் நிதி மோசடிகளில் தொலைத்தொடர்பு வளங்களை தவறாக பயன்படுத்துவதை எதிர்த்து டிஜிட்டல் நுண்ணறிவு தளத்தை அரசாங்கம் அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்த நுண்ணறிவு தளம் நிகழ்நேர உளவுத்துறை பகிர்வு, தகவல் பரிமாற்றம் மற்றும் பல்வேறு பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்கான பாதுகாப்பான மற்றும் ஒருங்கிணைந்த தளமாக செயல்படுகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள், சட்ட அமலாக்க முகவர், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், சமூக ஊடக தளங்கள் மற்றும் அடையாள ஆவணங்களை வழங்கும் அதிகாரிகள் ஆகியவை இதில் அடங்கும்.

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!

'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!

இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in