அடுத்தடுத்து சோகம்... கடலில் மூழ்கி மாயமான இளைஞரை தேடும் மீனவர்கள்!

கடலில் மாயமான முகமது முஜாஹித்
கடலில் மாயமான முகமது முஜாஹித்

ராமநாதபுரம் அடுத்த பாம்பன் பகுதியில் கடலில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் கடலில் மூழ்கி மாயமானதை அடுத்து, அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்திய பெருங்கடலில் கள்ளக்கடல் என்கிற பருவ கால நிகழ்வு உருவாகும் என கடல்சார் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. திடீரென கடலில் ஏற்படும் அதி உயர அலைகள் காரணமாக கடற்கரையோரம் நிற்பவர்களை அலைகள் கடலுக்குள் இழுத்துச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கொந்தளிப்பாக உள்ள கடல் பகுதிக்குள் இறங்க வேண்டாம் என தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதனையும் மீறி ஏராளமானோர் கடலுக்குள் இறங்கி குளிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.

பாம்பன் அடுத்த குந்துக்கால் கடல் பகுதி
பாம்பன் அடுத்த குந்துக்கால் கடல் பகுதி

இதனால் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் கன்னியாகுமரி கடல் பகுதியில் 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதேபோல் கடற்கரையை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளிலும் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால், கட்டுமரங்களில் சென்று மீன் பிடிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. கட்டு மரங்களில் மீன் பிடிக்க சொல்பவர்களும், கள்ளக் கடல் நிகழ்வு காரணமாக மீன்பிடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.

குந்துக்கால் கடற்கரை
குந்துக்கால் கடற்கரை

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அடுத்த குந்துக்கால் துறைமுகத்தில் இன்று மதியம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 7 இளைஞர்கள் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முகமது முஜாஹித் (20) என்ற இளைஞர் திடீரென கடலின் ஆழமான பகுதிக்கு சென்றதால், நீந்த முடியாமல் கடலுக்குள் மூழ்கி மாயமானார். இதையடுத்து மாயமான இளைஞரை மீனவர்கள் உதவியுடன் கடலோரக் காவல் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலில் நீந்துவதற்கு நல்ல அனுபவம் இருந்தாலும் இந்த சமயத்தில் அதனை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையமும், கடல் சார் ஆராய்ச்சி மையமும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!

இளையராஜா இசை தயாரிப்பாளருக்குத்தான் முழு சொந்தம்... தமிழ்பட இசையமைப்பாளர் பேட்டி!

பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்திச் சென்று பீர் பாட்டில்களால் தாக்குதல்... வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

அதிர்ச்சி... வெயிலில் சுருண்டு விழுந்து தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in