நீங்களே எதையாச்சும் கொண்டாந்து வெச்சுட்டா என்ன பண்றது... சோதனைக்கு வந்த போலீஸாரிடம் ஃபெலிக்ஸ் ஜெரால்டு மனைவி சரமாரி கேள்வி!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு
ஃபெலிக்ஸ் ஜெரால்டு

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூபர் ஃபெலிக்ஸ்  ஜெரால்டுவின்  வீட்டில் போலீஸார்  அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் ஃபெலிக்ஸின்  மனைவி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

அதிகாரிகளிடம் வாக்குவாதம்
அதிகாரிகளிடம் வாக்குவாதம்

பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார், வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். சவுக்கு சங்கர் கைதை தொடர்ந்து, அவரது பேட்டியை ஒளிபரப்பு செய்த யூடியூப் சேனலின் ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் கோவை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 

இதனையடுத்து, ஃபெலிக்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால், முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் வைத்து ஃபெலிக்ஸ் ஜெரால்டை திருச்சி மாவட்ட தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

போலீஸாரை அனுமதிக்க மறுக்கும் ஜேன் ஆஸ்டின்
போலீஸாரை அனுமதிக்க மறுக்கும் ஜேன் ஆஸ்டின்

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு ஃபெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை அழைத்து வந்த திருச்சி போலீஸார் அங்கிருந்து விசாரணைக்காக அவரை திருச்சி அழைத்துச்சென்றனர். திருச்சி மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்தில் வைத்து ஃபெலிக்ஸ் ஜெராலிடம் போலீஸார்  விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பின்னர், திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்பு ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஃபெலிக்ஸை மே 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபெலிக்ஸ் ஜெரால்டின் வீட்டிற்கு இன்று காலை சென்ற போலீஸார் அவரது வீட்டில் சோதனை நடத்துவதற்கான நீதிமன்ற அனுமதியை காண்பித்தனர். அவர்களை வாசலிலேயே தடுத்து நிறுத்திய ஃபெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி ஜேன் ஆஸ்டின்,  "நீங்க எதையாவது உள்ளே வெச்சுட்டு போயிட்டா என்ன ஆகுறது?”  என்று கேள்வி எழுப்பினார். அதன்பின். “உங்களை நாங்க செக் பண்ணணும்.  உள்ள எத்தன பேரு வரப்போறீங்க?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார் ஆஸ்டின். அவருக்கு உரிய பதில்களை பொறுமையுடன் போலீஸார் கூறினர்.  அதன் பின் சோதனைக்கு போலீஸார் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது திருச்சி போலீஸார், ஃபெலிக்ஸ் ஜெரால்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...
முடிதிருத்தும் கடையில் திடீரென நுழைந்த ராகுல் காந்தி; திக்குமுக்காடிப் போன ஊழியர்!

மும்பை பேனர் விழுந்த விபத்து.... பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு... இழப்பீடு அறிவிப்பு!

ஜெயிலுக்குப் போயும் நீ திருந்த மாட்டியா?... திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடிகை ராதிகா பாய்ச்சல்!

டெல்லியில் இருந்து சைக்கிளில் பயணம்... சேப்பாக்கத்தில் வெளியே கூடாரம்... தோனி ரசிகரின் வெறித்தனம்!

பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.80 லட்சம் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in