சிபிசிஎல் நிறுவனம் நில அளவீடு செய்வதை எதிர்த்து போராட்டம்... நாகையில் கைக்குழந்தைகளுடன் கைதான பெண்கள்!

சாபம் விட்டு நூதன போராட்டம் நடத்திய விவசாயிகள்
சாபம் விட்டு நூதன போராட்டம் நடத்திய விவசாயிகள்

சிபிசிஎல் நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டு 10வது நாளாக போராட்டம் நடத்திய 19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 5 மாவட்ட போலீஸாரின் பலத்த பாதுகாப்புடன் நில அளவீடு பணி துவங்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் நாகூர் அருகே பனங்குடியில் மத்திய அரசின் பொதுப்பணித்துறை நிறுவனமான சிபிசிஎல் ஆலை உள்ளது. இந்த ஆலையில் ரூ.31 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் ஆலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதற்காக 620 ஏக்கர் விவசாய நிலம், பனங்குடி, கோபுராஜபுரம், முட்டம், நரிமணம் ஆகிய பகுதிகளில் இருந்து கையகப்படுத்தப்பட்டுள்ளது. கையகப்படுத்திய நிலத்திற்கு R&R (மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டு தொகை) வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உரிய இழப்பீடு வழங்காமல் சிபிசிஎல் நிறுவனம் காலம் தாழ்த்தி வருவதால், பாதிக்கப்பட்ட சாகுபடிதாரர்கள், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

நாகை மாவட்ட சிபிசிஎல் நிறுவனம்
நாகை மாவட்ட சிபிசிஎல் நிறுவனம்

இதையடுத்து, விவசாயிகள் மக்களவைத் தேர்தலையும் புறக்கணித்து, மே 1ம் தேதி முதல் பிள்ளை பனங்குடி பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் தங்களுடைய கோரிக்கைகளை நூதன முறையில் அரசுக்கும், சிபிசிஎல் நிறுவனத்திற்கும் இவர்கள் தெரிவித்து வந்தனர்.

நேற்று முன்தினம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நிலம் அளவீடும் பணியை உரிய இழப்பீடு தொகை வழங்கிய பிறகு துவங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இதில் அதிகாரிகள் இடையே உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

போராட்டம் நடத்திய பெண்கள் உட்பட 19 பேர் கைக்குழந்தைகளுடன் கைது
போராட்டம் நடத்திய பெண்கள் உட்பட 19 பேர் கைக்குழந்தைகளுடன் கைது

இதனால் அப்பகுதி மக்கள் இன்று 10வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகப்பட்டினம் வருவாய்த்துறையினர் நில அளவீடு பணியை இன்று காலை முதல் தொடங்கியுள்ளனர். இதற்காக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். அப்போது விவசாயிகள் சிபிசிஎல் நிறுவனத்திற்கு எதிராக மண்ணை வாரி இறைத்து, பெண்கள் சாபம் விட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே நிலம் அளவிடும் பணியை தடுத்து நிறுத்த முயன்ற உத்தமசோழபுரம் ஊராட்சி சிறுநங்கை கிராமத்தை சேர்ந்த 19 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முற்பட்டதால், அவரையும் காவல் துறை கைது செய்தனர். கைக்குழந்தைகளுடன் பெண்கள் கைது செய்யப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!

'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!

இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in