மின்வேலி அமைத்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை: மின்வாரியம் முக்கிய உத்தரவு!

மின்வேலி
மின்வேலி

வயல்களில் நேரடி மின் வேலிகள் அமைப்பது அரசியலமைப்பு சட்டத்தின்படி தவறு என்றும், அவ்வாறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மின் வேலிகள் அமைப்பது, பயிர்களைப் பாதுகாக்க மட்டுமே என்பதுதான் எதார்த்தம். விளைநிலங்களில் மின்வேலி அமைக்க 9 முதல் 12 வாட்ஸ் மின்சாரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்படிக் குறைந்த அளவில் மின்சாரம் மட்டும் மின் வேலியில் பாய்ச்சப்படும் போது யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளுக்கு அதிர்வை மட்டும் ஏற்படுத்தும்.

உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாது. ஆனால் அதிக வாட்ஸ் மின்சாரம் பயன்படுத்தும் போது வன விலங்குகள் மட்டுமல்ல மனித உயிர்களும் பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக மின்வாரியம் நேரடி மின் வேலிகள் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், ‘’இந்திய மின்சாரச் சட்டத்தில் நேரடி மின் வேலிகள் அமைப்பதற்கு எதிராக கடுமையான விதிமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மற்றும் அத்தகைய வேலிகளை அமைப்பவர்கள் சட்டத்தின் 138 வது பிரிவின் கீழ் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை உட்பட கடுமையான சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும்’’ என குறிப்பிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in