தீபாவளி சீட்டு மோசடி! பிரபல நிறுவனத்தை சூறையாடிய வாடிக்கையாளர்கள்

நிறுவனத்தை சூறையாடிய வாடிக்கையாளர்கள்
நிறுவனத்தை சூறையாடிய வாடிக்கையாளர்கள்

தீபாவளி சீட்டு போட்டு கோடிக்கணக்கில் ஏமாற்றிய பிரபல நிறுவனத்தில் புகுந்து வாடிக்கையாளர்கள் சூறையாடிய சம்பவம் செய்யாறில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பொருட்களை எடுத்துச்சென்ற வாடிக்கையாளர்கள்
பொருட்களை எடுத்துச்சென்ற வாடிக்கையாளர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் ஏபிஆர் என்ற பிரபலமான நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்களிடம் தீபாவளி பண்ட் வசூல் செய்து அவர்களுக்கு பொருள்களை வழங்கி வந்திருக்கிறது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் இதன் கிளைகள் செயல்பட்டு வருவதோடு, அங்கும் பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து பரிசு பொருட்களை வழங்கி வந்துள்ளது. இதனிடையே, கடந்த சில நாட்களாக தீபாவளி பண்ட் கட்டிய வாடிக்கையாளர்களுக்கு இந்த நிறுவனம் முறையாக பொருள்கள் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

பொருட்களை எடுத்துச்சென்ற வாடிக்கையாளர்கள்
பொருட்களை எடுத்துச்சென்ற வாடிக்கையாளர்கள்

இதனால் அந்த நிறுவனத்தின் முன்பு வாடிக்கையாளர்கள் குவிந்தனர். இதையடுத்து தங்களுக்கு தேவையான பொருள்களை அந்த நிறுவனத்திடம் இருந்து வாடிக்கையாளர்கள் பெற்று வந்தனர். அதே நேரத்தில் பல வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் கட்டிய பணத்திற்கு பொருள் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்தனர். இந்தநிலையில், இன்று நிதி நிறுவனத்திற்கு நேரில் சென்று அங்கிருந்த கட்டில், சோபா, ஏசி உள்ளிட்ட பொருட்களை சூறையாடி எடுத்துச் சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in