அமீரிடம் 6 மணி நேரமாக தொடரும் விசாரணை... சூடுபிடிக்கும் போதைப்பொருள் கடத்தல் வழக்கு!

அமீரிடம் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை
அமீரிடம் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை

ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப் பொருள் கடத்தல் வழக்கில், திரைப்பட இயக்குநர் அமீரிடம், டெல்லி போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜாபர் சாதிக்
ஜாபர் சாதிக்

ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஜாபர் சாதிக் தொடர்புடைய தொழில் கூட்டாளிகள், அவரது நண்பர்கள், உறவினர்கள் என பலதரப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பிரபல திரைப்பட இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக்கின் நெருங்கிய நண்பராகவும், அவர் தயாரிப்பில் 'இறைவன் மிகப்பெரியவன்' என்ற திரைப்படத்தையும் இயக்கி வந்தார். ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த திரைப்பட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் (வலமிருந்து 2வது)
போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் (வலமிருந்து 2வது)

இந்நிலையில், ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஏப்ரல் 2ம் தேதி, டெல்லியில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு இயக்குநர் அமீருக்கு கடந்த 31ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்பேரில் இயக்குநர் அமீர் இன்று காலை டெல்லியில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் தனது வழக்கறிஞர்களுடன் விசாரணைக்கு ஆஜராகினார். இதனை தொடர்ந்து அமீரிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு மூத்த அதிகாரிகள் அமீரிடம் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின்போது அவரது வழக்கறிஞர்களை உடன் வைத்துக்கொள்ள, அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்கறிஞர்களுடன் அமீர்
டெல்லியில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்கறிஞர்களுடன் அமீர்

ஜாபர் சாதிக் எந்தெந்த வழிகளில் பணத்தை செலவழித்தார், அவர் தொடர்ச்சியாக சந்திக்கக் கூடிய நபர்கள் யார் என்பன போன்ற கேள்விகளை எல்லாம் அதிகாரிகள் தரப்பிலிருந்து அமீரிடம் கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் அமீரிடம் பல மணி நேரமாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவது அவரது நண்பர்கள் மட்டுமின்றி திரைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!

முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!

‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்

காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in