பகீர்...ஸ்டியரிங்கில் படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பு... பைக்கை போட்டுவிட்டு பதறி ஓடிய இளைஞர்கள்!

இருசக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த கருநாகப்பாம்பு
இருசக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த கருநாகப்பாம்பு

திண்டுக்கல்லில் இருசக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த கருநாகப் பாம்பு, நீண்ட நேரம் வெளியே வராததால், தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி அதனைப் பத்திரமாக பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் பெண்கள் அரசு கல்லூரி அருகே உள்ள மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் ஒன்றில் இரண்டு இளைஞர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு அடி நீளம் உள்ள கருநாகப் பாம்பு, வாகனத்தின் ஸ்டியரிங் மீது ஏறி, படம் எடுத்து சீறியது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும், வாகனத்தை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு, அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர். பின்னர் பாம்பு குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் பாம்பை தேடிய போது அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

பாம்பை பிடிக்க போராடிய தீயணைப்புத்துறையினர்
பாம்பை பிடிக்க போராடிய தீயணைப்புத்துறையினர்

எனினும் தொடர்ந்து பாம்பைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது ஒரு அடி நீள கருநாகப் பாம்பு குட்டி, சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு டூவீலரில் இருந்து மீட்கப்பட்டது. இதையடுத்து அந்த பாம்பு பத்திரமாக வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

இதனிடையே தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து, பாம்பை பிடிக்க முயற்சித்த காட்சிகளை, பார்ப்பதற்காக ஏராளமான வாகன ஓட்டிகள் மேம்பாலத்தின் மீது நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in