பாலியல் வீடியோ விவகாரத்தில் பல லட்சம் பேரம்... நாடு முழுக்க வசூல் வேட்டை நடத்திய போலி போலீஸ் அதிகாரி கைது!

மகேந்திர சிங் - நடுவில் நிற்பவர்
மகேந்திர சிங் - நடுவில் நிற்பவர்

பால் இச்சையில் பலவீனமான நபர்களை பாலியல் வீடியோ அழைப்பில் பங்கேற்க செய்து, பின்னர் அந்த வீடியோவை காட்டியே பிளாக்மெயில் செய்து, நாடு நெடுக கோடிகளை குவிந்த நபரை டெல்லி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு கடந்த வருடத்தின் இறுதியில் வாட்ஸ் ஆப்பில் வீடியோ அழைப்பு வந்திருக்கிறது. அழைப்பைத் திறந்ததும் எதிர்முனையில் ஏடாகூட ஆடையில் பெண் ஒருவர் தென்பட்டிருக்கிறார். பால் இச்சையில் பலவீனமான தொழிலதிபர், அதன் பின்னரும் அந்த பெண்ணிடம் வீடியோ அழைப்பில் பலமுறை தொடர்பு கொண்டிருக்கிறார். அவ்வாறான அழைப்பில் அவரும் ஆடையற்று தோன்றி இருந்திருக்கிறார்.

செக்ஸ்டார்சன்
செக்ஸ்டார்சன்

இந்த வீடியோ சில தினங்கள் கழித்து அந்த தொழிலபதிருக்கே வாட்ஸ் ஆப்பில் வந்தது. அதனைத் தொடர்ந்து வாய்ஸ் காலில் தொடர்பு கொண்ட நபர், தன்னை போலீஸ் உதவி கமிஷ்னர் ராம் பாண்டே என அறிமுகப்படுத்திக்கொண்டார். போலீஸார் ரெய்டில் சிக்கிய பெண் ஒருவரிடம் மேற்படி பாலியல் வீடியோ கிடைத்ததாகவும், அதனை நிரந்தரமாக அழிப்பதற்கு ரூ9 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் எனவும் நிர்பந்தம் செய்திருக்கிறார்.

இதனால் பயந்துபோன தொழிலதிபர் வேறுவழியின்றி கேட்ட தொகையை தந்திருக்கிறார். 2 வாரம் கழித்து மீண்டும் அழைத்த போலீஸ் அதிகாரி ராம் பாண்டே, வழக்கு பதியாமல் இருக்க ரூ15 லட்சம் நிர்பந்தம் செய்திருக்கிறார். இம்முறை தயங்கிய தொழிலதிபர், தனது நிர்வாண வீடியோ பிளாக் மெயில் போலீஸ் அதிகாரி கையில் சிக்கியிருப்பதாக நண்பர்களிடம் புலம்பியிருக்கிறார். அவர்கள் உதவியுடன் டெல்லி சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. செக்ஸ்டார்சன் வகை புகாரின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை தொடங்கியது.

செக்ஸ்டார்சன்
செக்ஸ்டார்சன்

டெல்லி போலீஸார் அதிரடியில் நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின்னர், ஹரியானா மாநிலம் மேவாட்டில் வைத்து மகேந்திர சிங் என்ற 36 வயது நபரை இன்று(அக்.26) மடக்கினார்கள். போலீஸ் அதிகாரி ராம் பாண்டே அடையாளத்தில் டெல்லி தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த மகேந்திர சிங், இதே போன்று வெவ்வேறு பெயர்களில் நாடு நெடுக ஏராளமானோரிடம் தேட்டை போட்டது தெரிய வந்தது. மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் என பெரும் வலைப்பின்னலின் அங்கமாக மகேந்திர சிங் செயல்பட்டதும் விசாரணையில் புலப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இதர நபர்களை கைது செய்ய டெல்லி க்ரைம் போலீஸார் வலைவிரித்து காத்திருக்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


மிஸ் பண்ணாதீங்க ... ஆவின் தீபாவளி காம்போ ஆஃபர் அறிவிப்பு!

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வேன்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தைகள்!

நடிகை அமலாபால் 2வது திருமணம்... லிப் கிஸ் கொடுத்து காதலனை அறிமுகப்படுத்தினார்!

பகீர்... திமுக பிரமுகர் மகன் படுகொலை; சென்னையில் பரபரப்பு!

பிரபல நடிகையின் மகன் மர்ம மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in