அம்பேத்கர் சிலையை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீச்சு... கடலூரில் 4 பேர் கைது!

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்று கைதாகியுள்ள 4 பேர்
அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்று கைதாகியுள்ள 4 பேர்

கடலூரில் அம்பேத்கர் சிலையை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், அருகில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடம் லேசான சேதம் அடைந்தது. இது தொடர்பாக போலீஸார் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அம்பேத்கர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் பின்புறம் பழைய ஊராட்சி மன்ற கட்டிடம் உள்ளது. நேற்று இரவு 12:30 மணியளவில் இங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு ஒன்றை அம்பேத்கர் சிலை மீது வீச முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த குண்டு தவறுதலாக சிலைக்கு பின்புறம் உள்ள பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்தின் மீது விழுந்து வெடித்துள்ளது.

அம்பேத்கர் சிலை
அம்பேத்கர் சிலை

நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் சிலைக்கும், பொது மக்களுக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தியதில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்றவர்கள் பற்றிய விவரம் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, குண்டு வீசிய சம்பவத்தில் ஈடுபட்ட வெற்றி (21), கிருஷ்ணகுமார் (21), சதீஷ் (29), விஜயராஜ் (22) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு
பெட்ரோல் குண்டு வீச்சு

இது குறித்து தகவல் அறிந்ததும் கடலூர் மாநகராட்சி துணை மேயரும், விசிக பிரமுகருமான தாமரைச்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்து அம்பேத்கர் சிலையை பார்வையிட்டார். சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்றவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்திலும் அவர் ஈடுபட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதால் அங்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட இளைஞர் மீது திடீர் தாக்குதல்... கர்நாடகாவில் அடுத்த சம்பவம்!

அரசுப்பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து... ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்!

அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்... ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி எழுதிய கடிதம் சிக்கியது!

தேர்தல் முன்விரோதத்தில் இரட்டை கொலை... 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு!

சென்னையில் பரபரப்பு... ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in