ஆவடியில் அதிர்ச்சி... கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணை துரத்திய மாடு!

பெண்மணி மாடு துரத்தும் புகைப்படம்
பெண்மணி மாடு துரத்தும் புகைப்படம்

சென்னையை அடுத்த ஆவடியில் கைக்குழந்தையுடன் தெருவில் சென்றுகொண்டிருந்த பெண்மணியை மாடு முட்ட துரத்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெண்மணி மாடு துரத்தும் புகைப்படம்
பெண்மணி மாடு துரத்தும் புகைப்படம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மாடுகள் சுற்றித் திரிவது வாடிக்கையாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருவல்லிக்கேணி பகுதியில் மாடு முட்டித் தூக்கி வீசியதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் சென்னையை அடுத்த ஆவடியில் கைக் குழந்தையுடன் நிற்கும் பெண்மணியை மாடு துரத்தும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பூந்தமல்லி உள்ள தனியார் குடியிருப்பு பகுதியில் பெண் ஒருவர் குழந்தைக்கு உணவு ஊட்டி கொண்டு இருந்துள்ளார். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த மாடு திடீரென பெண்மணியை முட்டி துரத்தி சென்றுள்ளது. இதில் சுதாரித்துக் கொண்ட பெண்மணி கைக்குழந்தையுடன் அருகில் இருந்த மற்றொரு வீட்டில் புகுந்துள்ளார். இதுத் தொடர்பான சிசிடிவி காட்சி மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்... சோகத்தில் நாட்டு மக்கள்!

அதிர்ச்சி... சேலம் ஆர் ஆர் பிரியாணி கடைக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்!

மகன் சாவில் மர்மம்... கண்டுகொள்ளாத போலீஸ்; வேதனையில் தாய், மகள் தற்கொலை

நாளை சந்திர கிரகணம்... குரு சந்திர யோகமும்... ராசிகளின் கூட்டணியும்!

இஸ்ரேல் குண்டுவீச்சில் குடும்பமே பலி... அடுத்த நாளே போர்க்களத்தில் களமிறங்கிய செய்தியாளர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in