போதைப்பொருள் புழக்கத்துக்கு உடந்தை - 6 அதிகாரிகள் உட்பட 22 போலீஸார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்
சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்

போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக செயல்பட்டு வந்த 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் உட்பட 14 காவலர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற செயல்களை தடுப்பதும் குற்ற செயல்களில் நிகழாமல் பார்த்துக் கொள்வதும் போலீஸாருக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்நிலையில் காவலர்கள் ஒவ்வொருவரும் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும், போதை பொருள் விற்பனை செய்யும் நபர்களுடன் கூட்டு சேர்ந்து அவர்களுக்கு ஆதரவாக செயல்பட கூடாது, மேலும் ஒரே காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் காவலர் மாற்றம் செய்ய வேண்டும் என ஏற்கனவே சென்னை வடக்கு காவல்துறை கூடுதல் ஆணையர் அஸ்ராகார்க் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

போதைப்பொருள்
போதைப்பொருள்

இந்நிலையில் தற்போது 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் உட்பட 14 காவலர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். போதை பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் காவலர்கள் 14 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தொடர்ந்து குற்ற செயல்களிலும் ஈடுபடும் நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், மூன்றாண்டு மேல் ஓரே காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர்கள் என வியாசர்பாடி, எம்.கே.பி நகர், கொடுங்கையூர், புளியந்தோப்பு, திருவெற்றியூர், ஆர்.கே.நகர், உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் 800-க்கு மேற்பட்ட காவலர்களை பணியிட மாற்றம் செய்து வடக்கு கூடுதல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

போலீஸ்
போலீஸ்

மேலும் பழைய வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் உள்ளது, முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு ஒருவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்புவதோடு தங்களது பணி முடிந்துவிட்டதாக எண்ணாமல், அனைத்து வழக்குகளையும் பின் தொடர்ந்து குற்றப்பத்திரிக்கை பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அனுப்பவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் போதை பொருள் விற்பனை செய்யும் நபர்களுடன் தொடர்பில் இருந்த 14 காவலர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஆணையர் உத்தரவிட்டுள்ள சம்பவம் காவல் துறையினர் இடையே பெரும் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in